தம்பிகளே... தங்கைகளே...
தம்பிகளே! தங்கைகளே!
இங்கே ஓடிவாரீர்!
அன்புடனே அக்கா சொல்லும்
அறிவுரையைக் கேளீர்!
அடுத்தவர்கள் பொருளின்மீது
ஆசை வைக்காதீர்!
அடுத்துக் கெடுக்கும் வேலையினை
என்றும் செய்யாதீர்!
சிறிய சிறிய விஷயங்களில்
சினமும் கொள்ளாதீர்!
பெரியவர்சொல் புறக்கணித்து
எதுவும் செய்யாதீர்!
முதியோரையும் காலத்தையும்
மதித்திடல் வேண்டும்,
சதிசெய்யும் கூட்டாளியை
விலக்கிடல் வேண்டும்!
சிக்கனமும் சேமிப்பும்
இளமையில் வேண்டும்,
பக்குவமாய்ப் படித்துநாளும்
பண்பட வேண்டும்.
நாள் :4
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை யில
விருப்பு வெறுப்பு அற்ற இறைவனடி சேர்ந்தவர்க்கு ஒரு பொழுதும் துன்பம் இல்லை.
வேண்டுதல் - அது வேண்டும் இது வேண்டுதல் என ஆசைப்படல்
வேண்டாமை - அது தீட்டு, இது தாழ்ச்சி, இது இகழ்ச்சி என மத ஜாதி, இன, மொழி இன்னும் இதர பிரிவினை சொல்லி மற்றதைப் பழித்து அழித்தொழிக்க நினைத்தல்
இலானடி சேர்ந்தார்க்கு - இப்படி வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு
யாண்டும் இடும்பை...
யாழ். நாகர்கோயில் பாடசாலை மாணவர் மீது 22/09/1995 அன்று ஸ்ரீலங்கா விமானப்படை இலக்கு வைத்து தாக்கிய பொழுது இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவச் சிறார்கள் பாரிய காயமடைந்தார்கள். அவர்களில் பலர் அவயவங்களை இழந்திருந்தார்கள்.
ஒரு தொடையோடு காலை இழந்த பத்து வயது மாணவன் கேட்டான் "எனது கால் முளைக்குமா" என்று?" ஆத்மாவை உறையவைக்கும் இந்தக்கேள்வி எனது பல இரவுகளின் நித்திரையைத் தொலைத்தது. அன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தில் கடமையிருந்த வைத்தியக்...
இப்பதிவின் மூலம் நாடக ஆளுமை திரு.தயாநிதி தம்பையா அவர்களின் முகநூல் பதிவாகும்.
வயாவிளானைச் சேர்ந்த மதிப்பு மிகு யோசெப், நேசமணி தம்பதிகளின் மகனான திரு. யோசெப் யேசுதாஸ் அவர்கள், நெதர்லாந்தில் வசித்து வருகிறார். வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் தாயக விடியலை விரும்பியதாலும் இன விடுதலை உணர்வின் உந்துதலாலும் உரிய நேரத்தில் இந்தியா சென்று கற்றுக் கொள்ள வேண்டியவற்றை கற்றவராகத் தாயகம் திரும்பினார்.
காலச்சக்கரத்தில் சிக்குண்ட இவர், தாயக விடுதலைப் பயணத்தில் காலில் விழுப்புண் அடைந்தார். கொண்ட கொள்கையில் பின்வாங்காத இவர் 1990 இல்...
https://youtu.be/-twcsHqIx7Q
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கானப் பதிலை கொமன்ட்ஸ் மூலம் சொல்லுங்கள் பார்க்கலாம்.
10 லீட்டர் பாத்திரம் ஒன்றில் பத்து லீட்டர் பால் உள்ளது. இப்போது உங்களுக்கு 7 லீட்டர் கொள்ளக் கூடிய பாத்திரம் ஒன்றும், 3 லீட்டர் கொள்ளக் கூடிய பாத்திரம் ஒன்றும் தரப்படுகிறது. இப்போது நீங்கள் 5 லீட்டர் பாலை ஒருவருக்குக் கொடுக்க வேண்டும். எப்படிக் கொடுப்பீர்கள்.
உதவி - 10 லீட்டர் பாத்திரம், 7 லீட்டர் பாத்திரம், 3 லீட்டர் பாத்திரம் மூன்றையும் மட்டுமே பயன்படுத்தலாம்.
வடிவேலு நடித்து பட்டி தொட்டி எல்லாம் சிரிப்பு வெடி வெடிச்சு பொங்கல் கொண்டாடிய படம் 23 ஆம் புலிகேசி. அந்தப்படத்தில் வரும் புலிகேசி போட்ட விடுகதைகள் இரண்டுக்கு விடை..
பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை
அவன் யார் ???
கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.
குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவன் என்று பொருள். ஸ்ரீ என்றால்...
இதை எழுதியவர் சமிபாட்டுத் தொகுதி மருத்துவ நிபுணர். நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எந்த நீளமான படைப்பானாலும் நிமிடத்தில் உள்வாங்கி உண்ட சுவையை நான்கே நான்கு அடிகளில் நயம்பட நவிலும் நவீன நாலடியார். பிடித்ததால் பதிகிறேன்.
1993
ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்
வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை
கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர
பண்டம் மட்டும்...
பல்துறை வல்லுனர்களை உலகுக்களித்த பெருமைக்குரியது வயவை மண். கால ஓட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குடிகளின்றி வெறிச்சோடிய அம்மண்ணின் பெருமை, அங்கே வேர் கொண்டு பன்னாடுகளில் கிளிபரப்பிய புதிய தலைமுறையால் மீண்டும் மீண்டும் பேணப்பட்டு வருகிறது. அவ்விதத்தில் வயாவிளானைப் பெருமிதப்படுத்திய பலருள் ஒருவராகத் திகழ்கிறார், ஜேர்மனியில் வசிக்கும் குத்துச்சண்டை வீரரான செல்வன் ஜெனோசன்.
2013 டிசம்பரில் குத்துச் சண்டைப் பயிற்சியைத் தொடங்கிய இவர் 2014 இல் களம் கண்டார். களம் கண்ட குறுகிய காலத்திலேயே தெற்கு ஜேர்மனியின் வாகையாளர் ஆனார்.
தொடர் கடினப் பயிற்சியாலும் மன...
வயாவிளான் மத்திய கல்லூரியின் கூரைகளின் ஒரு பகுதியில் சூரிய மின் கலத் தொகுதி 15/02/2018 அன்று பொருத்தப்பட்டது. அனு உலை மூலமும், இரசாயன எரிபொருள் மூலமும் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் சூழல் மாசடைதலைக் குறைக்க காற்றாலைகள், நீர்வீழ்ச்சிகள், சூரியச்சக்தி மூலம் மின்சக்தி பெறப்படுவது அவசியமான நிலையில், வயாவிளான் மத்திய கல்லூரியின் இம்முயற்சி போற்றுதலுக்குரியதாகும்.
இச்சூரியக் கலங்களைப் பொருத்துவதற்கான நிதி வளத்தை (ரூபாய் 550000), வயாவிளானைச் சேர்ந்த அமரர்களான திரு.பொன்னர் நாகமுத்து மற்றும் அவருடைய பாரியார் நாகமுத்து சின்னம்மா அவர்களின் நினைவாக, அவர்களுடைய பிள்ளைகளும்...