யாழ். நாகர்கோயில் பாடசாலை மாணவர் மீது 22/09/1995 அன்று ஸ்ரீலங்கா விமானப்படை இலக்கு வைத்து தாக்கிய பொழுது இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவச் சிறார்கள் பாரிய காயமடைந்தார்கள். அவர்களில் பலர் அவயவங்களை இழந்திருந்தார்கள்.
ஒரு தொடையோடு காலை இழந்த பத்து வயது மாணவன் கேட்டான் “எனது கால் முளைக்குமா” என்று?” ஆத்மாவை உறையவைக்கும் இந்தக்கேள்வி எனது பல இரவுகளின் நித்திரையைத் தொலைத்தது. அன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தில் கடமையிருந்த வைத்தியக் கலாநிதி கா.சுஜந்தன் அவர்கள் இந்த ரணத்தை எங்களிடம் சொல்ல முன்பே அழுதுவிட்டார்.
கடைந்தெடுத்த இந்தக் காடைத்தனங்களுக்கு இன்றில்லாவிடடாலும் என்றோ ஒருநாள் சிங்கள தேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
பிற்சேர்ப்பு – 22/09/2018
இவ் ஒளிப்படத்தில் இருக்கும் செயற்கைக் கால் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் கடும் சண்டை நடைபெற்ற பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை ஓர் வைத்தியர் உறுதி செய்து உள்ளார்.