நடிகர் கமலகாஸன் கட்சி தொடங்கி விட்டார். “ஆட்சிக்கு வந்தால் இலவசமாக ஸ்கூட்டி தருவீங்களா” என்ற கேள்விக்கு “நீங்கள் மற்றவருக்கு ஸ்கூட்டி வழங்கும் அளவுக்கு வசதியாவீர்கள்” என்று பதில் சொல்லி உள்ளார். வளர்ச்சியை நோக்கிய நேரிய பார்வை இது.
“நான் உதவிக்கொண்டே இருப்பேன். நீ பெற்றுக்கொண்டே இரு” என்பது அடக்குமுறையின் ஒரு வடிவம். “இன்று நான் உனக்கு உதவுகிறேன்; நாளை நீ இன்னொருவனுக்கு உதவு” என்பதுதான் வளர்ச்சி; எழுச்சி; புரட்சி; மறு மலர்ச்சி. எங்கள் ஊருக்குத் தேவையானது இதுதான்.
என்னைப் பொறுத்தவரை ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு உதவுதல்...
நாள் 6
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
உடல் என்னும் பொறிக்கு வாயில்களாக அமைந்தவை கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகியவை. இந்த ஐந்தையும் அவித்தவன் அதாவது பக்குவப்படுத்தியவன். பலர் அறுத்தவன் என்பார்கள். அப்படியென்றால் ஐந்தறுத்தான் என்று வள்ளுவர் சொல்லியிருப்பார். ஐந்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டவன் ஐந்தவித்தான். அவித்தல் என்னும் செயல் பக்குவப்படுத்தலைக் குறிக்கிறது..
அடுத்து சொல்வதுதான் உச்சம். பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்....
ஆசுகவியே வாழ்க
வயவைக்கு பெருமை சேர்த்த கவியே வாழ்க
வயாவிளான் மைந்தனே வாழ்க
கல்லடியானே வாழ்க
பெருத்த ஊர் வயாவிளான் என
உன் நாவால் பாடிய கவியே வாழ்க
மாற்றோர் உன்னை
கல்லடியான் ஆசுகவி, கொண்டாடினான் ஒடியல்கூல், என அழைக்க,
வயாவிளான் மைந்தன் நான் எனக் கூறிய கவியே வாழ்க
நட்புடன் பழகி
கொண்டாடினான் ஒடியல்கூல் எனப் பெயரெடுத்த கவியே வாழ்க
எதிரிகளை நேருக்கு நேர் நின்று உன்
சொல்லால் வென்ற கவியே வாழ்க
எதிரிகளும் உன் கவி கண்டு உன்னை
ஆசுகவி என அழைக்க வைத்த கவியே வாழ்க
உன் புலமை கண்ட...
அடுத்து வரிசையில் வானில் மிகப் பிரகாசமாகத் தெரியக் கூடியது
காதல் தேவதை, அதிர்ஷ்டகாரகன், அசுர குரு, திருமணத்தின் அதிபதி.. இப்படி பலவாறு வர்ணிக்கப்படும் சுக்கிரன்..
சுக்கிரன் சூரியனில் இருந்து 10.8 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் கோளாகும். இது சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கிறது, அதே சமயம் பூமியை விட குறைந்த தொலைவில் இருப்பதால் சூரியனுக்கு மிக அருகிலேயே தெரியும், இன்று கூட சூரிய மறைந்த உடன் வானில் மேற்கு திசையில் பிரகாசமாகத் தெரியும்.
வெள்ளிக் கிரகம் ஏறத்தாழ பூமியின் அளவே உள்ளது. ஆனால் திருமணத்தில்...
ஐந்தாண்டுகளுக்கு முன்..
இதே நாள்.. இதே நேரம்...
இதமான குளிர் இதயம் வருட,
வீட்டில் குடியிருந்த தனிமையை இளையராஜா விரட்டி அடிக்க..
வந்து விழுந்தது அச்செய்தி..
எந்த நேரத்தில் என்ன வேண்டும் என்று
எந்த நேரமும் எமைப்பற்றியே சிந்தித்து..
அந்தந்த நேரத்தில் அதையதை தந்தீரே..
ஒன்றை மட்டும் மிச்சம் வைத்தீரே..
மொத்தமாய்த் தந்திடவோ..
என்றுதான் எண்ணினோம்....
அத்தனை காலமும் நீர்
தந்திடா துயரத்தை
மொத்தமாய் அன்று தந்தீர்
உன் உயிர் பிரிந்த சேதி கேட்ட அந்த நொடி..
எம் கண்கள் வழியே உயிர் கசிந்தது....
உம் உதிரம் குழைந்து
உருவான எம் சொரூபம் நொருங்கியது..
நீர் தந்த வித்தை எல்லாம்
அந்த ஒரு நொடிப்பொழுதில்
கண்கட்டி வித்தை காட்டியது..
உற்ற...
ஒரு கலைநிகழ்சசி நடந்துகொண்டிருந்த இடத்தில் அதன் விலைப் பட்டியலில் கதிரை 2 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது. ஆசுகவி இது தவறு கதிரைக்கு 2 ரூபாய் எனப் போடுங்கள் எனச் சொல்ல அவர்கள் கேட்கவில்லை. இவர்கள் தவறை உணர்த்த ஐயா செயலில் இறங்கினர்.
2 ரூபாய் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சி பாத்துவிட்டுப் போகும் போது கதிரையையும் கொண்டுபோக, காவலர்கள் தடுக்க, நீங்கள் கதிரை 2 ரூபாய் என விற்றிர்கள்; 2 ரூபாய் தந்துவிடடேன். இப்போ கதிரை எனக்கு சொந்தம் என சொல்ல அப்போதுதான் அவர்களுக்கு...
நாள் :5
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
போற்றுவார் போற்றலும் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!! - கண்ணதாசன்
எல்லா புகழும் இறைவனுக்கே - ஏ ஆர் ரகுமான்
வினை செயவதால் கர்மபலன் கிடைக்கிறது. அது நல்வினையாக இருந்தால் நற்கருமம் என்றும் தீவினையாக இருந்தால் தீங்கருமம் ஆகியவை கிட்டுகின்றன. நற்கருமம் நற்பலனைக் கொடுத்து உயர்த்துகிறது. தீகருமம் இன்னலுக்கு ஆளாக்குகிறது. ஆனால் கருமபலன்கள் இருக்கும் வரை பிறவிப் பிணி தீராது. எனவே கருமங்களைச் செய்யுங்கள். ஆனால் பலனை விரும்பாதீர்கள்....
பயனுள்ள தகவல்கள்
கண்கண்ட தெய்வங்கள் தாய் தந்தைவாடகை இல்லா வீடு தாயின் கருவறை
கொடிய ஆயுதம் பொறாமை எரிச்சல்
உடனடித் தேவை அன்பு , பாசம் , ஒற்றுமை , சகோதரத்துவம்
கொடுக்க கொடுக்க குறையாதவை அன்பு,பாசம்,கருணை.
உயிர்களின் ஆதாரம் ஐம் பூதங்கள்
புண்ணியம் செய்ய கொடுக்கப்படும் பிறப்பு மானிடம்
பாவத்தின் சம்பளம் மறுபிறப்பு
பூமிக்கு அழகு மனிதர்கள்
மனிதர்க்கு அழகு அன்பு, பாசம், பண்பு,மனிதநேயம்,பணிவு,கருணை
பலதும் பத்தும்
சிறந்த கொடையாளி பனைமரம்
செல்வத்திற்கு அழகு தானம் செய்வது
கர்ணனுக்கு அழகு கொடை
கண்ணனுக்கு அழகு நீலநிறம்
சிறுவருக்கு அழகு கள்ளம் கபடமற்ற சிரிப்பு
பெண்ணுக்கு அழகு புடவை
மங்கையர்க்கு அழகு தாவணி பாவாடை
ஆணின் அழகு கம்பீரம்
இளையோர் அழகு அச்சமின்மை
வீரத்துக்கு
அழகு பகைவரையும் வியக்க வைப்பது
உடலுக்கு அழகு ஆடை
தாய்க்கு அழகு நிறைமாத கர்ப்பம்
தத்தைக்கு அழகு நல்ல பிள்ளைகளை தருவது
இறைவனுக்கு அழகு எங்கும் நிறைந்திருப்பது
வயாவிளானின் வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் வயாவிளான் மக்கள் ஒன்றியம், மீளெழுச்சிக்கான உதவுங் கரங்கள் ஊடாகப் பல செயற்றிட்டங்களைச் செய்து வருகின்றனர்.
இவர்களுடைய முகநூல்ப் பக்கம்