26.2 C
Jaffna
Saturday, November 23, 2024
கலங்கரை விளக்குகள் மின்னொளி பாய்ச்சிட சங்கு நாதங்கள் ஜீவன்களை மாய்த்தன..! என்பு மச்சையில் குத்திய ஊசிக்காற்று வாசல் பெருக்க பூ வாளியால் நீர்தெளித்து புள்ளிகள் வைத்தாள் தேவதை...! தெளித்த தண்ணீர் பிஞ்சுவிரல் ஓவியமாக நாசியைத் துளைத்தது கோலப்பொடி மணம்..! நங்கூரமிட்ட துமிகளில் தூரல்கள் தட்டமைக்க அங்கே குடியேறின மோதும் சங்கீதங்கள்...! மழையில் மையலிலார் யாருளர் வையகத்தில்..? பன்னீரில் நீராடும் ரோஜாக் கூட்டமானேன்..! சீக்கான பட்டணத்தின் சிங்காரப் பூங்காக்களில் மறைந்திருந்து ரசித்தது மோகத்துடன் தடவியது அங்கமெல்லாம்.....! அசையும் சொகுசு வீட்டின் சன்னல்களில் கன்னம்வைத்து ருசித்த சிலீர் உணர்வுகள் வேகமாய் சரசம் புரிந்தன நரம்புகளுடன் ..! அரச மரங்களில் ஈரஞ்சொட்டும் இலைகளின் உரசல்களில் உருகுகையில் குறுக்கிடும் அம்மா இப்போதும் கறுப்புக் குடையுடன்...! கள்வெறியில் வந்ததுளிகள் மோதித் தமை அழிக்க கம்பிகளில் சொட்டியது செம்மை சிதைந்த குருதி..! அன்பு விலங்குடன் விட்டுப் பிரிகையில் கலங்குவது புரிந்தது வெள்ளத்து நிழல்...! சிறைப்பிடித்த பெருமிதத்தில் சரஞ்சரமாய் சிந்தியது கூரை..! சிறைப்பட்ட எனை நினைத்து அழுதது சுருங்கிய...
ஒரு காட்டின் வழியே வேடன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். மரம் ஒன்றில் சில கிளிகள் இருப்பதைக் கண்டான். அவற்றின் மீது அம்பெய்ய அவன் முயன்ற போது, கிளிகள் ஒன்று “வேடா! சற்றுப் பொறு” என்றது. வேடன் என்ன என்பது போலப் பார்த்தான். “நான் சொல்வதை வைத்து நாங்கள் எத்தனை பேர் என்று சொல்” என்றது கிளி. வேடன் சம்மதித்தான்.. கிளி “நாங்களும் எங்களைப் போலவும், எங்களில் பாதியும், பாதியில் பாதியும் உன்னை சேர்த்தால் நூறு வரும். அப்படி என்றால் நாங்கள் எத்தனை கிளிகள்...
நாள் : 8 பால் : அறத்துப்பால் அதிகாரம் : கடவுள் வாழ்த்து செய்யுள் : 8 அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது அறம் என்பது ஒரு கடல். பொருள் என்பது இன்னொரு கடல். இன்பம் என்பது இன்னொரு கடல். இப்படிப் பலகடல்கள் உண்டு. அறவாழி அந்தணன் யார்? அறத்தைக் கற்றவன். அதன்படி ஒழுகுபவன் அறவாழி அந்தணன். அவன் அடி சேர்ந்து அறத்தைக் கற்கவேண்டும். அப்படிக் கற்காவிடின் மற்ற கடல்களில் நீந்த இயலாது. அறம் பொருள் இன்பம் என வரிசைப்படுத்தியதற்கு காரணம் உண்டு. முதலில் எது தர்மம், எது அறம், எது நல்லது...
நாங்கள் சம்பாதிக்கும் எல்லாமே எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. எங்கள் சம்பாத்தியத்தில் பெற்றோருக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு பங்குண்டு. அவர்கள் பங்குகள் கொடுத்தது போக எமக்கென மிஞ்சுவதில் தான் நாம் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதைத்தான் “தனக்கு மிஞ்சியதில்தான் தானமும் தர்மமும்” என்ற பழமொழி சொல்கிறது. ஆனால் அப்பழமொழி காலப் போக்கில் “தனக்கு மிஞ்சி தானமும் தர்மமும்” என்று சொல்லப்படுகிறது.   அடுத்த வாரம் மீண்டும் ஒரு பழமொழியுடன் சந்திப்போம்.
நெடுநாட்களின் பின் காகிதத்தை விரித்து கவிதையெழுத ஆயத்தமாகின்றேன். உலகை வாசித்து இதயச்சுவரில் வரைந்து வைத்த ஓவியங்களை கரைத்தாயிற்று. பேனாவிலும் நிரப்பியாயிற்று. காகிதத்தில் வழியவிட முனைய திரண்டு வந்து முட்டுக்கட்டை போடுகின்றன புத்தகப் பரத்தைகளை புரட்டிப்பார்த்த நேரங்கள். சமரும் சமரசமுமாய் அவைகளை சமாளித்து விட்டதை தொடர முயல பின்னால் வந்து கழுத்தில் தொங்குகின்றன முன் பிறந்த என் கவிக்குழந்தைகள். மீண்டும் மீண்டும் முயன்றும் முடியாத போதிலும் கவிஞனென இறுமாற எனக்காக தலைகுனியும் பேனா சிந்துகிற துளிகளால் உயிர்பெறுகிறது காகிதம்.
முன்பொரு நேரம் புத்தகங்களுக்குள் புதைந்திருந்தேன். பின்னர் அது இணைய வெளியில் இலத்திரன் இறகு கொண்டு பறப்பதாய் மாறிப்போனது. ஆனால் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வேகமெடுத்த என் உலகத்தில் நான் காணாமல் போய் விட்டேன். நின்று நிதானிக்க நேரமில்லாவிட்டாலும் பழைய பக்கங்களை புரட்டிப்பார்க்க முடிகிறது இப்போது. கவிதைகள் என்னைச் சூழ்ந்திருந்த காலம் அது. கட்டிலில், சாப்பாட்டு மேசையில், கழிவறையில், பயணத்தில், பணி இடத்தில் என எங்கேயும் என்னோடு கவிதைகள் கதைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தக்காலத்தை மீட்டு வர முடியுமோ தெரியவில்லை. ஆனால் கொஞ்சமேனும்...
2004 - ல் எடுக்கப்பட்ட சுக்கிரன் படங்கள் சுக்கிரன் - பூமிக்கு இடையிலான தொலைவுதான் கோள்களுக்கு இடையேயான தொலைவுகளில் மிகச் சிறியதாகும், சுக்கிரன் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். கோள்களின் இயக்க விதிகளின் படி ஏன் நீள் வட்டமாக இல்லை என யோசிக்க வேண்டும். அதற்கும் அதன் சுழற்சி திசை மாறுபாடாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது.. சந்திரன் பூமி உடைந்து தோன்றியது என்பதற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கலாம். சுக்கிரன் மீது எதுவோ மோதியதில் உண்டான சந்திரன், சுக்கிரனின் சுழற்சி அந்த மோதலில்...
என் ஆங்கில இலக்கிய ஆசான் அடிக்கடி சொல்வார், மொழியின் முழுமை கவிதை என்று. நுணுக்கமான உணர்வுகளை பொருத்தமான சொற்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். விசாலமான கருக்களை சுமக்கக் கூடிய வாமணச் சொற்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தம் கொஞ்ச வேண்டும். சங்கதி பேச வேண்டும். இத்தனையும் செய்ய நிச்சயம் மொழியில் முழுமை அடைந்திருக்க வேண்டும் என்று எல்லாரும் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனாலும் அந்த ஆச்சரியமே ஆச்சரியப்படும் விதத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில அபூர்வங்கள் பூப்பதுண்டு. குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வயவை மண்ணில் அவ்வாறு பூத்தவர்தான் கவிதைகளின்...
நாள் : 7 பால் : அறத்துப்பால் அதிகாரம் : கடவுள் வாழ்த்து செய்யுள் : 7 தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது. உவமை சொல்லப்பட இயலாதவன். நெடு நாள் ஆய்ந்தபின் நாரை மூக்கிற்கு உவமை கிட்டியது பாண்டிய மன்னனுக்கு. பனம்படு கிழங்கு பிளந்த கூர்மூக்கு நாரை என. ஒரு பொருளின் ஒரு குணம் இன்னொரு பொருளில் இருந்தால் ஒன்றுக்கொன்று உவமையாகி விடுகிறது. மான் விழியாள், மீன் விழியாள் என உவமைகள் சொல்லலாம். அப்படி ஒன்றையுமே உவமை சொல்லமுடியாது இறைவனுக்கு. இதுதான் இறைவன் என வரையறுக்க முடியாது என்கிறார் வள்ளுவர்...
http://www.fourmilab.ch/cgi-bin/Solar சூரியனைச் சுற்றும் கிரகங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைக் காட்டும் இணையதளம் அது. சுக்கிரனும் நமது சந்திரனைப் போலவே பிறை வடிவங்களைக் காட்டும். ஆனா இன்னொரு கூத்தைக் கேளுங்க.. எப்ப சுக்கிரன் முழுவட்டமா தெரியுதோ அப்போ ஒளி மங்கி இருக்கும். எப்போ பிறைவடிவில் தெரியுதோ அப்பதான் அதிகப் பிரகாசத்தோட தெரியும். காரணம் அது முழு வட்டமா தெரியும் பொழுது சூரியனுக்கு அந்தப்பக்கம் இருக்குமில்லையா, சூரியனோட ஒளி, மற்றும் தூரம் காரணமாக ஒளி மங்கிக் காணப்படுகிறது.. சுக்கிரனின் வளர்பிறை தேய்பிறை ஒரு முழுச்சுற்று வர 1.6 ஆண்டுகள் ஆகும். அதே மாதிரி...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS