சுக்கிரன் – வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – 5

127

http://www.fourmilab.ch/cgi-bin/Solar

சூரியனைச் சுற்றும் கிரகங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைக் காட்டும் இணையதளம் அது.

சுக்கிரனும் நமது சந்திரனைப் போலவே பிறை வடிவங்களைக் காட்டும்.

ஆனா இன்னொரு கூத்தைக் கேளுங்க.. எப்ப சுக்கிரன் முழுவட்டமா தெரியுதோ அப்போ ஒளி மங்கி இருக்கும். எப்போ பிறைவடிவில் தெரியுதோ அப்பதான் அதிகப் பிரகாசத்தோட தெரியும். காரணம் அது முழு வட்டமா தெரியும் பொழுது சூரியனுக்கு அந்தப்பக்கம் இருக்குமில்லையா, சூரியனோட ஒளி, மற்றும் தூரம் காரணமாக ஒளி மங்கிக் காணப்படுகிறது..

சுக்கிரனின் வளர்பிறை தேய்பிறை ஒரு முழுச்சுற்று வர 1.6 ஆண்டுகள் ஆகும்.

அதே மாதிரி சுக்கிரன் சூரியன் முகத்தை கடக்கும் பொழுது சூரியனுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும். இது ஒரு நூற்றாண்டில் இருமுறை இது போலத் தெரியும். அதுவும் அருகருகில்…

போனமுறை சூரியனைக் கடந்தது 2004 ல். அடுத்து 2012 -ல். . அதற்கடுத்து அதைக் காண 2117 வரைக் காத்திருக்க வேண்டும்.. அதனால் தவறாமல் பார்த்துடுங்க.