வயவையூரின் இசை ஆளுமை தவநாதன் தவமைந்தனின் அழைப்பிதழ்.🙏

282

வணக்கம் என் உயிரிலும் மேலான நண்பர்களே!

மங்கலகரமான,

இனிப்பான,

ஈழத்தமிழர்களுக்குத் தேவையான,

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

செய்தியுடன் உங்கள் முன் நிற்கிறேன்.

நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம்

என்னும் மஹாகவி உருத்திரமூர்த்தியின் பொன்னான வரிகள் உயிர் பெறும் வகையில்

”ஈழத்தின் தமிழிசை”

என்னும் தனித்துவ அடையாளத்துடன்

சங்கப் புலவர் ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து

இன்று வரை இசைபடக் கவிபுனைந்த

ஈழத்துக் கவிராயர்களின் பாடல்கள் பல தெரிவுசெய்யப்பட்டு அவற்றுள்நூறுபாடல்கள் 21.04.2019 அன்று இலங்கை வேந்தன் மண்டபத்தில்

இசையழகுடன் அரங்கேற்றப்படவுள்ளன.

இவற்றுள்

தானவர்ணம் 04
பதவர்ணம் 01
கீர்த்தனை 68
பதம் 07
தாலாட்டு 02
துதிப்பாடல் 06
காவடிச்சிந்து 02
தில்லானா 05
திருப்புகழ் 05

ஆகிய உருப்படிகள் மண்ணின் மணம் கமழ இசைக்கப்படவுள்ளன.

பதினைந்து ஆண்டு கால கனவிற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகள் ஓய்வில்லாமல் செயற்படவேண்டி இருந்தது.

இறைவன் திருவருளால் இந்த எண்ணம் ஈடேறுகின்றது,

கடவுளுக்கு நன்றி

எனது மாணவர்கள் ஒன்பது பேர் என்னுடன் இணைந்து குரலிசை வழங்கவுள்ளனர்.அவர்களுக்கு எனது நன்றிகள்.

ஈழத்தின் புகழ்பூத்த துணையிசைக் கருவியாளர்கள் இந் நிகழ்வை அணிசெய்கின்றனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

எங்கள் தமிழிசைக்கு உயிரூட்ட அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்….

இது எங்கள் உயிரோடு கலந்த தமிழிசை

……………………………………..
ஒலியமைப்பு – குமணன், சேகர் ஒலி, யாழ்ப்பாணம்

ஒளிப்படம், ஆவணமாக்கல் – ரமணரகு, புதுமை படைப்பகம், யாழ்ப்பாணம்