கூவு குயிலே கூவு குயிலே
கும்பிடுவார் மனந்தானைக் கூவு குயிலே
நாவுக்கினியவனை நல்லகுயிலே
நம்பனை இங்குவரக் கூவுகுயிலே
சிவன் சிவன் என்று சொல்லும் சித்தர் குழாம்
தேடும் பொருளை வரக் கூவு குயிலே
நாவலரும் பாவலரும் பணிந்தேத்தும்
நல்ல சிவன் இங்கு வரக் கூவுகுயிலே
தேன் சொரியும் சோலையில்வாழ் தெய்வக்குயிலே
தேவாதி தேவன் வரக் கூவு குயிலே
இளம்பிறை அணிந்த பிரான் இங்கேவர
எழிலுடன் பறந்து போய்க் கூவுகுயிலே
வாயாரப் பாடு வார்தம் மனத்தானை
வள்ளலை இங்குவரக் கூவு குயிலே.