அழகு என்றால்
அவளைச் சொல்லலாம்.
கிளியோப் பட்ராவையும்
அவளே வெல்லலாம்..

தலையில் மொட்டாக்கு
கண்டதும்
இதழே ஒரு மொட்டாகும்..

நெற்றி,
பிறைநிலவும் பாடும்
போற்றி..

விழிகளிரண்டும்
கண்சிமிட்டும் சிப்பி..
மூக்கெண்டால்
கண்தேடும் செதுக்கிய சிற்பி..

கழுத்து
ஆம்பல் முகம் தாங்கும்
கைக்கூம்பல்…

நீண்ட கைகளால்
மாண்டு போனான் கவிஞன்..

மகன் வயசுக்காரி
அவள் முகத்தில் இரத்தல்.
என்னிடத்தில்…?!