வானத்தைப் பார்ப்பது என்றால் நமக்கெல்லாம் தெரிந்த முதல் பொருள் சூரியன்
சூரியன் ஒரு நட்சத்திரம். அது பூமிக்கு அருகில் இருப்பதால் பகலில் சூரியன் இருக்கும் பொழுது சூரியன் மட்டுமே தெரிகிறது. சில சமயங்களில் மாத்திரமே பகலில் சந்திரனும் தெரியும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 14.960 கோடி மைல்களாகும். சூரிய ஒளி பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றது,
சூரியனின் குறுக்களவு 13,90,000 கிலோமீட்டர்கள் ஆகும்.
சுரியன் மேற்பரப்பின் வெப்ப நிலை 5800 கெல்வின் ஆகும். அதாவது 5527 செல்சியஸ்.
சூரியனில் 70 சதவிகிதம் ஹைட்ரஜனும் 28சதவிகிதம் ஹீலியமும் உள்ளது.
சூரியன் சுற்றுவது நம் பூமி சுற்றுவதை விட வித்தியாசமானது. சுரியன் மையப்பகுதி 25.4 நாட்களுக்கு ஒரு முறை சுழல, துருவப் பகுதிகள் 36 நாட்களுக்கு ஒருமுறை சுழல்கின்றன. காரணம் சூரியன் முழுக்க முழுக்க வாயுப்பொருட்களால் ஆனதினால்தான்,
சுரியனின் கருப்பகுதியில் 1.56 கோடி கெல்வின்கள் (செல்சியஸ் என்றுகூட சொல்லலாம், 273 டிகிரி இதில் பெரிய வித்தியாசமில்லை). இங்கு உள்ள அழுத்தமானது பூமியின் கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்தம் போன்று 250 பில்லியன் அளவு பெரிது.
ஒவ்வொரு வினாடியும் சூரியனி 70 கோடி டன் ஹைட்ரஜன் 69.5 கோடி டன் ஹீலியமாக மாறுகிறது. மிச்சம் 50 இலட்சம் டன் சக்தியாக காமாக் கதிர்களாக கதிரியக்கமாய் வெளிப்படுகிறது.
சூரியனின் மேற்பரப்பு ஃபோட்டோஸ்பியர் எனப்படுகிறது. சூரியப் புள்ளிகள் எனப்படும் சூரியனின் மேல் தற்காலிகமாகத் தோன்றும் புள்ளிகள் சூரியனின் தற்காலிகக் குளிர்ந்த பிரதேசங்கள் ஆகும். சில சூரியப் புள்ளிகள் 50000 கிலோமீட்டர் அளவு கூட பெரியதாக இருக்கும்.
சுரியனின் மையத்தில் தோன்றும் வெப்பம் வெப்பக்கடத்தல் மூலமாகவே சூரியனின் மேல்பகுதியை அடைகிறது. இதில் 80 சதவிகித வெப்பம் இழக்கப்படுகிறது.
ஃபோட்டோஸ்பியருக்கு மேற்பட்ட பகுதி குரோமோஸ்பியர் எனப்ப்டுகிறது. இதற்கும் மேற்பட்ட பகுதியே கரோனா எனப்படும் பகுதியாகும். இது சாதாரணமாக கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் சூரிய கிரகணத்தின் போது இது மிகத் தெளிவாகத் தெரியும்.
[media]http://www.solarviews.com/raw/sun/eclips94.mpg[/media]
இந்தக் கரோனா 1 இலட்சம் கெல்வின் வரை வெப்பமுள்ளதாகும்,
சூரியனின் காந்தப் புலம் மிக மிகச் சிக்கலான ஒன்றாகும். இது புளூட்டோவின் சுற்றுப் பாதையையும் தாண்டி விரவி இருப்பதாகும்.
ஒளி மற்றும் வெப்பம் மட்டுமன்றி சூரியனில் இருந்து சூரியக் காற்றும் வீசுகிறது. இது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் துகள்களால் ஆனது, இதன் வேகம் வினாடிக்கு 450 கிலோமீட்டர்களே ஆகும். இதுவே சூரியத் தழல் வெளிப்பாட்டின் போது மிக அதிகமான துகள்கள் வெளிப்படுத்தப் படுகிறது. இவை பூமியின் மின், மற்றும் மின்னணு சாதனங்களையே பாதிக்கும் அளவிற்கு இருக்கும். (2012 -இல் இது போன்ற தழல் வெளிப்படும் என்பதும் ஒரு உயிருள்ள வதந்தியாகும்.)
பூமியின் வடதுருவப் பகுதியில் இந்தச் சூரியப் புயலினால் வானத்தில் வண்ண வண்ணக் காட்சிகள் தெரியும். இதை நார்தர்ன் லைட்ஸ் என்பார்கள்,
சூரியத் தழல் வெளிப்படும் பொழுது இந்த சூரியக் காற்றின் வேகம் வினாடிக்கு 750கி.மீ வரை கூட உயரலாம். இவை வால்நட்சத்திரங்களையும் செயற்கைக் கோள்களையும் பாதிக்கின்றன.
சூரியம் பால்வீதியைச் சேர்ந்தது. பால்வீதியை இது 250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறைச் சுற்றி வருகிறது.
சூரியனின் தற்போதைய வயது 4.5 பில்லியன் வருடங்கள் எனக் கணிக்கப்படுகிறது. சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை வாழலாம் என்றும் ஆனால் அதன் ஒளி அப்பொழுது இப்பொழுது இருப்பதை விட இரட்டிப்பாக இருக்கும் எனவும் ஊகிக்க முடிகிறது. அதன் பிறகு ஹைட்ரஜன் குறையக் குறைய சூரியனின் இறுதிக்காலம் வர, சூரியன் மார்க்கெட் இழந்த நடிகை போல பெருத்து.. சிவந்து வெடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது