வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – கலிஸ்டோ

கலிஸ்டோ

கலிஸ்டோ என்பது கலிலியோ கண்டுபிடித்த நான்கு சந்திரன்களில் ஒன்று. கனிமீட் சூரியக் குடும்பத்திலியே மிகப் பெரிய சந்திரன் எனப் பார்த்தோம் இல்லியா. இது அதுக்கு அடுத்த தம்பி!

இதுதான் கலிலியோ கண்டு பிடித்த நான்கு சந்திரன்களில் குருவில் இருந்து தொலைவில் சுற்றி வருவதாகும். இது குருவிலிருந்து 18, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வருது.

இதோட குறுக்களவு 4800 கிலோமீட்டர் ஆகும். ஏறத்தாழ நம்ம புதன் கிரகத்தோட சைஸ்.

ஆனால் இது மென்மையான் சந்திரன் எடை குறைச்சல்தான், 1.08 x 10^23 கிலோ எடைதான்,

இந்தச் சந்திரனைப் பொறுத்தவரை உயர்ந்த மலைகள் கிடையாது.. ஆழ்ந்த பள்ளங்கள் கிடையாது. யூரோப்பா கூட இப்படித்தான் என்று படிச்சமில்ல.

விண்கற்கள் விழுந்த குழிகள், வளைய வடிவமான தடங்கள் தவிர பெரிசா ஒண்ணும் கிடையாது..

என்னது வளையமா? அப்படின்னு இன்பா கேட்கிறாரு பாருங்க..

கீழே இருக்கிற படத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க

[media]http://www.solarviews.com/raw/jup/callist2.gif[/media]

வல்ஹல்லா எனப்படும் மேற்கண்ட வளையத்தின் உள்வளையம் 300 கிலோமீட்டர் குறுக்களவு உள்ளது. வெளிவளையம் 3400 கி.மீ குறுக்களவு உள்ளது. இதைப் பார்த்தா தண்ணியில யாரோ கல்லெறிந்ததால் உண்டான வளையங்கள் மாதிரி இல்ல?

[media]http://www.solarviews.com/raw/jup/galcal4.jpg[/media]

இரண்டாவது அமைப்பு அக்சார். இதுவும் இதே மாதிரி பொதுமைய வளைய அமைப்புதான். இதன் குறுக்களவு 1700 கி.மீ இருக்கும்,

வல்ஹல்லா (ஹல்லா என்றாக் கன்னடத்தில் பள்ளம் என்று அர்த்தம் ஹி ஹி..) மேற்குத் தொடர்ச்சி மலை என்றால் அக்சார் கிழக்குத் தொடர்ச்சி மலை என வச்சுக்கலாம். ஏன்னா அக்சார் தொடர்ச்சியான வளையமா இல்லாம விட்டு விட்டு இருக்கும்.

அடுத்து இன்னொரு வகை பள்ளங்கள்

பாருங்க அம்மிக் கல்லு கொத்தின மாதிரி இங்க வரிசையா பள்ளங்கள் தெரியுதா? இதனுடைய நீளம் 600 கி.மீ. அகலம் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர். இது எப்படி உண்டாகி இருக்கும் தெரியுமா?

ஒரு வால் நட்சத்திரம், நம்ம டெம்பிள் டட்டில் மாதிரி குருவோட ஈர்ப்பு விசையால் இழுக்கப் படுதுன்னு வச்சுக்குவோம். அதன் வேகம் அதிகரிக்கும். அந்த வேகத்தில வால் பகுதியில பெரியபெரிய துண்டுகளா ஒடையும். அந்த மாதிரி உடைந்த பகுதிகள் நம்ம க்லிஸ்டோ மேல விழுந்தததால இது உண்டாகி இருக்கணும் அப்படின்னு ஒரு கணிப்பு.

அந்த வளையங்கள் உண்டான கதை என்னவா இருக்கும் அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னால கலிஸ்டோவின் உள்ளமைப்பு எப்படி இருக்கக் கூடும் அப்படின்னு பார்ப்போம்.

பார்த்தீங்களா இதுவரைப் பார்த்ததில் இதில ஒண்ணு மிஸ்ஸிங். அதாங்க உலோக உட்கரு..

மேலோடு 80 லிருந்து 100 கிலோ மீட்டர் மொத்தமுள்ள உறைந்த ஒன்று. இதில சிலிகேட்(மணல்), தண்ணீர்,

அதுக்கு கீழ 50 ல இருந்து 200 கி.மீ வரைக்கும் உப்புக் கடல் நீர் இருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.. ஆஹா தண்ணி குருவின் சந்திரன்களில் ரொம்பவே இருக்குன்னு பாக்கறீங்களா?

அதுக்குக் கீழ கல்லும், ஐஸூம் இருக்கு அப்படீங்கறாங்க..

இப்பச் சொல்றேன் கேளுங்க. அந்த கான்செண்ட்ரேடட் சர்க்கிள் (நீரலை வடிவம்) இருக்கே.. அது பெரிய விண்கற்கள் விழுந்ததால் மேல இருக்கிற ஐஸ் உருகி அலை உண்டாகி மறுபடி உறைந்து போன வடிவமாக இருக்க வேண்டும்.

தொடரும்.