28.9 C
Jaffna
Sunday, May 19, 2024
கனவுகள் பூக்கும் காலை வேளையில் புயலென வந்தாள் புதினப்பெண்ணாள் கல்லூரி சாலையில் குண்டு வெடிப்பு கல்யாண சாலையில் தீ விபத்து.. விளையும் கனவுகளை-நடு நிலையிலே கலைத்து தீவிரவாதமாய்.. குலைய வைக்கிறாள் கலையான அரசியலை வலைபின்னி அரிக்கிறாள் தீவிர(த)மாய் கையூட்டு அரசியவள்
பீரோக்களில் உத்தியோகம் யூரோக்களில் சம்பளம் போகவர சீசன் டிக்கட் ஹெல்த்துக்கு மெடிக்கல் கவர் லோனுக்கு சொந்த வீடு சிலோனுக்குப் பெயர் சுடுகாடு பிள்ளைக்கு சோசல் காசு சினிமாவுக்கு இலவசப்பாசு தமிழ் என்றால் அன்னியமா மகிழ்வுக்குத் தமிழ்ப்படமா இலவசங்கள் தந்துவிட்டால் அதுவே உனக்குச் சொந்தநாடு காக்கைக் கூட்டில் இருந்துவிட்டால் குயிலுக்கு அது சொந்தவீடா
நாய்களுக்கு உடுத்திக்கொள்ள அட்டகாச ஆடை படுத்துறங்கப் பஞ்சு மெத்தை பசியெடுத்தால் பார்லி பிஸ்கட் மாதந்தவறா மெடிக்கல் செக்கிங் நம் தேசக் குழந்தைக்கு நிர்வாணமே ஆடையாக மரநிழலே படுக்கையறை கஞ்சிக்கே வழியில்லை பனடோலும் அங்கில்லை எல்லோரும் கடவுளின் குழந்தைகளாம் இவர்கள் ஏழைக்கடவுளின் குழந்தைகளா
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையில் தமிழ் பயின்று, பட்டம் பெற்றவர்களுக்கான பட்டம் அளிப்பு எதிர் வரும் ஏப்பிரலில் நடைபெற உள்ளது. அது தொடர்பான விளம்பர ஒளிவீச்சு.. https://youtu.be/A-tAZJeMwJY
தொன்மைக் காலத்தில் புலவர்கள் கவிச்சமர் புரிந்தனர் என்று கற்றிருக்கின்றோம்; வியப்புற்றிருக்கின்றோம். அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டாத குறையை பிறிதொரு தளத்தில் இடம்பெற்ற கவிச்சதிர் ஆட்டம் தீர்த்தது. யான் பெற்ற இன்பம் மற்றோரும் பெற..   கவியே தான் கவிழ்ந்தாலும் கமழ்ந்தாலும் கவி கவிதான்... ! கரும்பில் அடிக் கரும்பென்ன நுனிக்கரும்பென்ன பாகம் பார்த்து ருசிக்க பட்டணத்து பட்டினத்தாரா யாம்... ! பட்டு இனத்தார் தான் மெல்ல மெல்ல இழைபின்னி கூடுகட்டும் பட்டினத்தார்தாம் பட்டும் படாமல் இருந்தாலும் பட்டு பட்டு தான் பட்டுப் போனோமே... பட்டிலென்ன பகட்டு.... ! ஒரு வேளை பசியாற படும் பாடு பெரும்பாடு....!! ஒருவேளை .... ஒரு வேலை கிடைத்தால் தீர்ந்திடுமோ .... எம்பாடு... ! ——————————   குறிப்பு - விளக்கம் தேவைப்பட்டால் தரத் தயாராக உள்ளேன்.
வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளையினர், இரண்டாவது முறையாக நடாத்தும் மாபெரும் ஒன்றுகூடல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் நாள் நடைபெற உள்ளது.               உலகெங்கும் வாழும் கல்லூரிப் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் ஒன்றுகூடலில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர், வயாவிளான் மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளையினர்.
இது வயாவிளான் பற்றி விக்கிபீடியாவில் உள்ள சிறு குறிப்பு. இதில் தவறு இருக்கலாம். இன்னும் தகவல்கள் சேர்க்கலாம்... அதை செய்ய ஒரு அணில் முயற்சி. வயாவிளானும் நானும் என்ற தலைப்பில் உங்கள் மன ஓட்டங்ககளை வயவனுக்கு அனுப்புங்கள். தற்போது வயாவிளானின் மீளெழுச்சிக்காக அமைப்புகளும், தனிநபர் முனைப்புகளும் தோற்றம் பெற்று மகிழ்வைத் தருகின்றன. அவை தொடர்பான தகவல்கள், அமைப்பு ரீதியான செய்திக்குறிப்புகள், இன்ன பிற ஆக்கங்கள் என்பவற்றையும் வயவனில் பிரசுரிக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி vayavans@gmail.com   வயாவிளான் (Vayavilan) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு கிராமம். வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த இக்கிராமம்...
இமைகளின் மீதமர்ந்து விட்ட கனவுகளுடன் தூக்கத்தில் நடக்கிறேன் பகலிலும்.. காற்றும் கடலும் புணர்ந்து பிறந்த அலைக்குழந்தையின் அழுகையும் எழுப்பவில்லை.. மழைத் தூரிகை மண்ணில் வரைந்த காடுகளின் கீதமும் கலைக்கவில்லை.. நிலக்காரிகையின் மலைப் பருவமேடுகள் பெய்கின்ற கந்தர்வமும் உசுப்பவில்லை.. இயற்கையும் கொதித்திருக்கும்.. அடைமழையென வீசப்பட்ட சூரிய எரிகற்களில் பற்றி எரிந்தன கனவுகள்.. அணைந்துதான் போயிற்று ஆதவனின் கோபம்.. ஆகாயக் குடை திரண்டு வந்து சாமரச் சுகம் தந்தது.. அப்போதுதான்.. என்கிருந்தோ வந்த மனத்துளி வேரை நனைத்தது.. கட்பூக்கள் பூத்தன..
நீயாண்ணா எனும் தங்கையின் பார்வை.. திருத்தவே முடியாதெனும் அண்ணனின் தோரணை.. என்னடா.. இப்படிப் பண்ணிட்ட என்ற அம்மாவின் வாஞ்சை.. எதுவுமே எதுவும் செய்திடவில்லை எப்போதும் போல.. அப்பா மட்டும்தான் மிச்சமெனும் நினைப்புத்தான் மிஞ்சியது. சட்டென்று ஒரு வலி சுள்ளென்றது காய்ந்த காயத்தில் முரட்டுச் சுவர் தேய்த்த மாதிரி.. எப்போதும் திட்டியே பழக்கப்பட்ட அப்பா எதுவும் பேசாமல் போன போது..  

மழை

உள்ளே இருந்து வெளியில் வெறித்தாள் அவள். அவளைத் தொட முடியாத சோகத்தில் யன்னல் கண்ணாடியில் தலை மோதி தற்கொலையானது வெளியில் பெய்த மழை..

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS