1970/80 காலப் பெருசுகளின் காதல் கீதம் என்ன என்று கேட்டால், நரைத்த புருவம் விரிய, இதழோரம் குறும்பு வழிய சின்ன மாமியே.. உன் சிட்டு மகளெங்கே என்பார்கள். அத்தனை பிரபல்யம் அந்தப் பாடல். 80/90 இல் பிறந்தவர்கள் பலர் கூட அப்பாடலை மறந்திருக்க மாட்டார்கள். ஏன் நான் கூட அர்த்தம் புரியாமல், துள்ளல் இசைக்காக உதட்டில் ஒட்டித் திரிந்தேன்.
எவக்கிரீன் பைலாவாக ஒலித்துக்கொண்டிருக்கும் சுராங்கனி பாடல் அன்று பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய ஒன்று. ஏன் இன்று கூட விளம்பரப் பின்னணி இசையாகப் பயன்படுத்தப்படுகின்ற பாடல். இசைஞானி இளையராஜாவால் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல். சிலோன் மனோகர் என்ற உன்னத கலைஞனை உலகுக்கு அடையாளம் காட்டிய பாடல்.
அந்த உன்னதமான கலைஞன் இன்று இயற்கை எய்திவிட்டார். அவருக்கு வயவனின் அஞ்சலிகள்.