கங்காரு தேசப் பேராசிரியரும் தமிழ்த்தேச மருத்துவமானிகளும்

“கற்றாரைக் கற்றோரே காமுறுவர்!”

என மூதுரை அறிவுபூர்வாய் அழகழகாய் ஆழமாய் உரைப்பது போலவே…

வலிசுமப்பர்களை வலிசுமந்தவர்களாலேயே
சரிவர புரிந்து கொள்ளமுடியும்.

அந்த வகையில் கங்காரு நாட்டின் பெருந்தகை ஒருவர் எமைப் புரிந்து கொண்ட காதையின் ஒரு கவளத்தை இன்று சொல்லப் போகின்றேன் கவனமாய்க் கேளுங்கள்!

அவுஸ்திரேலியா நாட்டுப் பேராசிரியர் Dr.John Whitehall அவர்கள்தான் சின்னஞ் சிறிய இக்காதையின் நாயகன் ஆவார்.

உலகை உலுக்கிய இரண்டாம் (2 ஆம்) உலக மகா யுத்தத்தில் தனது தந்தையை செங்களத்திடை இழந்தவர் இந்த நாயகன்.

தூரதேசம் ஒன்றிற்கு யுத்தத்துக்குச் சென்ற தந்தை அங்கேயே வீரக்களம் ஆடி வீழ்ந்துவிட தந்தையின் வீர உடலைக் கூடக் காணாத சிறுவனாக தாயாரின் அரவணைப்பில் பல கடினங்களை கடந்து படித்து பேராசிரியரானார்!

இவர் கண்டங்களைக் கடந்து மானுடத்தை யாசிக்கவும் அவரது தாயார் சொல்லிக் கொடுத்தார்.

கடலன்னையும் பெருங்கோபம் (Tsunami) கொண்டெமைத் தாக்கியழித்த போது அவுஸ்ரேயாவிலிருந்து உதவிப் பணிகளுக்காக எம் மண்ணுக்கு வந்தார்.
(Post Tsunami Relief Works)

வலியின் மேல் வலியாக பேரலை தமிழ் பேசும் மக்களைத் தாக்கியதையும் அவர்களுக்கான உரிமை இன்னுமோர் இனத்தால் (chauvinism) மறுக்கப்படுவது கண்டு கலங்கியே நின்றார்.

ஏட்டறிவும் வரலாற்றுப் பட்டறிவும் கொண்ட வெள்ளைப் பேராசிரியர்
ஆழிப்பேரலை மீட்புப் பணிக்காலத்தில் பிரெஞ்சுப் படைகளுக்கும் அமெரிக்காப் படைகளுக்கும் கொரில்லாப் பாடத்தைப் புகட்டிய “வியட்நாம் நாட்டின் வியங்கொங் போராளிகள்”போல சில போராளிகளைக் கிழக்கிலங்கையில் கண்டு வியந்தார்.

அவர்களில் சிலர் சீனாவின் Bare Foot Doctors போல மக்களுக்குள் மக்களாக வாழ்ந்து கொண்டு குறைந்த வளத்துடன் பெரும் சேவையாற்றும் மருத்துவப் போராளிகளைக் கண்டார்.

அவர்களின் குணவியல்புகளைக் கண்டு ஆய்வு செய்ததால் அதிக ஆர்வம் கொண்டார்.

கருவியும் மருத்துவப்பையும் சுமந்து நின்ற அவர்களின் கையில் சிகரெட், மதுப்போத்தல் இருக்கவில்லை என்பதைக் கண்டபோது அவருக்கு “வியங்கொங் வீரர்களை”விடவும் பல படிகள் உயர்வான உன்னத மரியாதை உண்டானது.

இந்த போராளி மருத்துவர்கள் மீதிலே மயங்கிக் காதல் கொண்டார்.

அறம்தனை அன்றாடம் போற்றியே வாழ்ந்த மறவர்களை மருத்துவர்களாகக் கொண்டிலங்கிய
தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மருத்துவமனையிலேயே இரவிலும் தங்கியிருந்து நோயாளர்களை இரவு பகல் பாராது சேவையாற்றினார்.

அப்போதுதான் தமிழீழத்தின் பெரும் கடடமைப்புகள் தொடர்பாக அங்கிருந்த உதவி மருத்துவர் மூலம் அறிந்து கொள்கிறார். அந்தக் கடடமைப்பில் தமிழீழ மருத்துவக் கல்லூரியும் இருப்பதை அறிந்து கொள்கிறார்.

அவர்களின் இறுதியாண்டுப் மாணவர்களுக்கு குழந்தை மருத்துவம( Paediatric Medicine) தொடர்பான விரிவுரைகளில் சில இடர்கள் யாழ் மருத்துவ பீடத்தில் எதிர் கொள்ளப்பட்ட போது காலகட்டத்தில்தான் தமிழீழ மருத்துவர்களுக்கான விரிவுரைகளைத் திறம்படச் செய்து முடிக்க திருவுளம் கொண்டார்.

குழந்தை மருத்துவம்( Paediatrics Lecturers) தொடர்பான அவரின் விரிவுரையையே இங்கே படத்தில் காண்கிறீர்கள்.🙏

John Whitehall is a senior paediatrician in North Queensland, Australia, 🇦🇺 where he is a director of neonatal intensive care unit as well as an Associate Professor in public health and Tropical Medicine.

தொடரும்…

– வயவையூர் அறத்தலைவன் –