உயிரச்சம் இன்றி மக்கள் பணியாற்றிய மாந்த நேசன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் அவர்கள்

91

20/04/2009 காலை 2_3 மணி இருக்கும். மாத்தளன் பண்ட்ல் சண்டை தொடங்கியது, சிறிதுநேரத்திலேயே பண்ட் விடுபட்டதை மோட்டார் ஒருங்கிணைப்புமூலம் வோக்கி ஊடாக கேட்கமுடிந்து. அப்ப மாத்தளன் மருத்துவமனை, மருத்துவர்கள், நோயாளிகள்,,, ?

ஆம்,,மருத்துவமனையில் இருந்து புனிதன் அண்ணா வின் CDMA தொலைபேசியில் தொடர்புஏற்பட வலையர்மடத்திலிருந்து வரதன் டொக்டர் உடன் கடற்கரையோரமாகவே land cruiser ஓடிச்சென்று மாத்தளன்கடற்கரையோரமாக land creuiser விட்டு இறங்கும்போதுதான் நிலமையின் வீரியம் புரிந்ததுமாத்தளன் BOX எண்டு,,

விழுந்து, உறுண்டு, தவழ்ந்து மருத்துவமனையை அடைந்தோம், மல்லாவி மருத்துவமனைபணியாளர் ஒருவர் காயமடைந்து அவருடைய மனைவியுடன் நின்றிருந்தார். அத்தோடு பலகாயமடைந்த போராளிகள், சிசேரியன் செய்த தாய்மார்கள் இருந்தார்கள். அங்கு நின்ற புனிதண்ணை நிலமையை விளக்கியிருந்தார். ஏனையோரைக் காணாதது சற்று தளர்வாகஇருந்தது.

வரதன் டொக்டரும் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமலே செயற்பட்டுக்கொண்டிருந்தார். முக்கியமான மருத்துகளையும் எடுத்துக்கொண்டும் அங்கிருந்த வாகனத்தில் காயமடைந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு வெளியேறினோம். வலைஞ்ஞர்மடம்; முள்ளிவாய்க்கால்; வட்டுவாகல்.,

01/02/2009, அன்று உடையார்கட்டுல் இருந்து மருத்துவமனையை மாற்றி மாத்தளன்பாடசாலைக்கு மாற்றி இருந்தோம். பாடசாலையில் மக்கள் இடம்பெயர்ந்து இருந்ததால்முல்லைத்தீவு AGA இருந்த பார்த்தீபன் sir உதவியாக அனைவருக்கும் Tent கொடுத்தபின்அங்கிருந்து வெளியேறினார்கள். ஓர் பகுதியில் கடற்புலிகளின் மருத்துவ விடுதியாக இருந்துஅவர்களும் வெளியேறிய பின் நாம் மருத்துவமனையாக மாற்றுவதற்காக வேலை செய்துகொண்டுஇருந்தோம்.

இரவு 11 மணிக்கு மேல் இருக்கும். முரளி அண்ணா, சத்தியா அண்ணா, ஆகியோர் புதுக்குடியிருப்புமருத்துவமனையில் இருந்து வந்திருந்தனர். இரவிரவாக புதுக்குடியிருப்பு பகுதியில் செல்லடி , காலை 5 1/2 அல்லது 6 மணிக்கு பிக்கப்பில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே வரதன் டொக்டர் கதிர் டொக்டர் பிரைட்டன் டொக்டர் போன்றோருடன் பலர் இருந்தனர்குறிப்பாக ICRC யினரும் இருந்தனர்.

கொத்து பரோட்டா போட்டமாதிரி மருத்துவமனை இருந்தது. இடிபாடுகள் பிணங்களை கடந்துசத்திரசிகிச்சை கூடத்திலிருந்த கருவிகள், உபகரணங்கள் போன்றவற்றை

படுக்கைவிரிப்பில் போட்டு கட்டி பிக்கப்பில் போட்டுக்கொண்டு  அனைவருடனும் வெளியேறிமாத்தளன் மருத்துவமனையை அடைந்தோம்.

எம்மைத்தொடர்ந்து ICRC மாத்தளன் வந்து தங்களுடன் இருந்த பணியாளர்களை தொடர்ந்துவேலை செய்ய பணித்து விட்டு , முதலாவது கப்பலில் ஏறி உயிர்தப்பினர்.

02/02/2009-20/04/2009

மாத்தளன் மருத்துவமனை இக்காலத்தில் பல இலட்சம் மக்களின் நம்பிக்கையாக பல மருத்துவர்கள் இணைந்தது பல்லாயிரக்கணக்கான காயமடைந்தவர்களுக்கான சத்திரசிகிச்சை யினைமேற்க்கொண்டு ஓர் தேசிய வைத்தியசாலைக்கு ஒப்பாக பல சிறந்த சேவையை வழங்கியது. அங்கிருந்து சேவையாற்றிய மருத்துவர்கள் மக்களினால் கதாநாயகர்களாகவே பார்க்கப்பட்டனர்,

,,,,,,,,,,

நா.வண்ணன்