வரலாற்றுப் பெட்டகம்தனைத் தயார் செய்த எங்கள் சிற்பியை எங்கினிக் காண்போம்.

மார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும்.

இம்மாதம் “மார்ஸ்” என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

தமிழர்களைப் பொறுத்த வரையிலும் அவர்கள் “பால்ராஜ்” எனும் தம் போர்க் கடவுளை அதிகம் நினைக்கும் மாதம் ஆகும்.

ஆம்,

இதே போன்றதொரு பங்குனியில்தான் வடமராட்சியின் கிழக்கில் தடம் பதித்து புனிதம் மிக்க அந்த வெண் மணலில் காயப்படும் எமது மக்களுக்காகவும், விழுப்புண் அடைந்து கொண்டிருந்த வீரமறவர்களுக்காகவும் மருத்துவ பணி செய்தோம்!

மகத்தான பணி மூலம் ஆனையிறவு வெற்றிக்கு சின்னஞ் சிறியதோர் பங்களிப்பையும் பெருமையோடு நல்கினோம்!

ஆதாலால்தான் என்னவோ….

நாங்கள் வருடா வருடம் பங்குனி மாதத்தையும் வடமராட்சி கிழக்கினையும் ஒரு வித உணர்வுப் பெருக்கோடு நினைப்பதுண்டு!

ஆம்,

பங்குனியும் வடமராட்சி கிழக்கும் என் மனதை மாறி மாறி வருடியும் நெருடியும் கொண்டிருக்கும் மாதத்தில் அந்த வீரமண்ணின் தேசப்பற்றுறுதி மிக்க ஓர் ஆளுமைப் பெண்ணை இழந்திருக்கின்றோம்!🥲

பன்னிரண்டாயிரம் (12000) ஆண்டுகளுக்கு முன்னர் பாரெங்கும் பரந்து சென்ற எம்மவர்தம் வரலாறுதனை சொல்லும் வரலாற்றுப் பெட்டகம்தனை தயார் செய்த சிற்பியை இனி எங்கே காண்பது?

எழுத்தாணி எடுத்து
ஏடுகள் சமைத்து…..

“அறம்” காத்த தங்கையை
“அகம்”தனில் நீள நினைந்து
“கரம்”தனைக் கூப்பி
“சிரம்” தனை தாழ்த்தி

புகழ் வணக்கம்
செலுத்தியே
நிமிர்வோம்
நிரந்தரமாய்!🙏