தணியா தவிப்புடன் தகிக்கும் தணிகை

மூத்த போராளி மருத்துவர் தணிகை

இவர் யார் , எதுவாக இருந்தார் எமது மண்ணுக்கும் மக்களுக்குமான இவரது பணிகள் எத்தகையன
இவர் எதைச் சிந்தித்தார் எதைச் செயலாற்றுகிறார் என்பது பற்றி எமது மூத்த போராளிகள் பலரும் மக்களும் அவரோடு நெருங்கிப் பழகும் நாமும் தெளிவாக அறிவோம் .

நிற்க!
முகம் மறைத்து உலாவும் முகநூல் மேதாவிகளுக்கும், கட்சிகளின் பின்னால் காவடி தூக்குபவர்களுக்கும்,
யு ரியூப்பில் புலி பார்த்தவர்களுக்கும் என்ன அருகதை இருக்கிறது இவர் போன்றோரை விமர்சிக்க..

இன்றும் இவர் போல் பல போராளிகள் உடல் சுமக்கும் இரும்புத்துகள்களோடு நித்தமுலன்று மண்சுமந்த நினைவுகளோடு அழுதழுது மண்ணுக்கும் மக்களுக்கும் எதைச் செய்துவிடப் போகின்றோம் என்கின்ற தவிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எமது மக்களுக்கான பணிகளைத் ,தேவைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள் .

வெற்று விமர்சனப் பட்சிகளே!
நீங்கள் யாராகவும் இருந்துவிட்டுப் போங்கள்
ஒன்றை மட்டும் மறவாதீர்கள் இவர்களின் குருதியிலும் தியாகங்களிலும் அர்பணிப்பிலும் தான் நீங்கள்
இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

இவர் யார் , எதுவாக இருந்தார் எமது மண்ணுக்கும் மக்களுக்குமான இவரது பணிகள் எத்தகையன 
இவர் எதைச் சிந்தித்தார் எதைச் செயலாற்றுகிறார் என்பது பற்றி எமது மூத்த போராளிகள் பலரும் மக்களும் அவரோடு நெருங்கிப் பழகும் நாமும் தெளிவாக அறிவோம் 

– குவேந்திரன்

மண்சுமந்த நினைவுகளோடு அழுதழுது மண்ணுக்கும் மக்களுக்கும் எதைச் செய்துவிடப் போகின்றோம் என்கின்ற தவிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.