“நல்ல நாள் என கருதி ஒரு நாளை தெரிவு செய்து அந்நாளில் தங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கல்வியில் சிறந்து விளங்குவர் என பெற்றோர் ஏடு தொடக்குகின்றனர்.
கல்வியில் அல்லது பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களை ஏடு தொடக்குவதற்காக அணுகுகின்றனர்.
ஒரு குழந்தையின் எதிர்காலம் ஏடு தொடக்கியவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை.
பெற்றோர்களே, பதவிகளில் இருப்பவர்கள் தற்போது தமது கடமைகளை புனிதமான முறையில் செய்வதில்லை.
ஆகவே நீங்கள் அவர்களை நாடிச் செல்வதில் எது வித அர்த்தமும் இல்லை.
ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் தாய் தகப்னை விட வேறொருவருக்கு அதிக அக்கறை இருக்க முடியாது.
ஆகவே பெற்றோர்கள் நீங்களே ஏடு தொடக்குங்கள் அல்லது உங்களின் பெற்றோர்கள் பேரக் குழந்தைகளுக்கு ஏடு தொடக்க வாய்ப்பு கொடுங்கள்.
அந்த வயதானவர்களுக்கு அது ஒரு வாழ்நாள் சந்தோசமாக இருக்கும்.”
என எந்தன் நண்பர் திரு.சரவணமுத்து கௌரிதாசன் அவர்கள் காத்திரமான ஒரு பதிவினை இட்டிருந்தார்.
ஆதலினால்,
அதற்குப் பொருத்தமான ஒளிகொண்ட ஒளிப்படம் ஒன்றினை எனது கோப்பிலிருந்து தெரிவு ஆதாரப்படுத்தி உள்ளேன்.
ஆம், ஒளிப்படத்தில் அப்பம்மா கிளியாள்(புஷ்பநாயகி) தனது அருமைப் பேத்தி “எழிலினி”இற்கு தனது மடியிருத்தி அன்போடு ஏடு தொடக்குகின்றார்.
– நன்றி –