நாளொரு குறள் 25

நாள் : 25
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 5

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐந்து அவித்தான் ஆற்றல். அவித்தல் என்பது ஒரு உணவு பக்குவப்படுத்தும் முறை. உடல் என்னும் பொறிக்கு வாயில்களாக அமைந்தவை கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகியவை. இந்த ஐந்தையும் அவித்தவன் அதாவது பக்குவப்படுத்தியவன். அவனுடைய ஆற்றல் அகன்ற வானில் வாழ்பவர்களின் மன்னனாகிய இந்திரனைச் சொன்னாலும் ஈடாகாது.

இந்திரனின் வலிமை உலகைக் கட்டுப்படுத்தல் என்று சொல்வார்கள். அதையும் புலனடக்கத்தால் சாதிக்கலாம் என்கிறார் வள்ளுவர்.