சிவகுமாரர்கள்.

1974 ஆம் ஆண்டு மற்றும் 1975,1976 ஆகிய ஆண்டுகளில் அவதரித்த எந்தன் நண்பர்களில் பலருக்கு ஒரு பொதுவான பெயரே இருந்தது!

வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழர்களைப் பொறுத்த வரையில் அது ஒரு புனிதமான பொதுப்பெயர் ஆகும்!

அந்தப் புனிதமான பொதுப் பெயர் “சிவகுமாரன்” ஆகும்.

சில பெற்றோர்கள் “சிவகுமாரன்” எனும் பெயரின் கடையெழுத்தைச் சிறிது மாற்றி சிவகுமார் எனவும் அக்கால கட்டத்தில் பெயர் வைத்திருந்தார்கள்.

ஒரே வகுப்பில் பல “சிவகுமாரன்”கள் இருந்ததால் நாங்கள் அவர்களை வித்தியாசப்படுத்த…

01)வெள்ளைச் சிவகுமாரன்

02)கறுத்தைச் சிவகுமாரன்

03)கட்டைச் சிவகுமாரன்

என அழைப்பதுண்டு.

சில வேளைகளில் ஊர்பெயரை நண்பர்களின் பெயரின் முன்னே சேர்த்து

“பலாலிச்சிவகுமாரன்,

“அச்சுவேலிச்சிவகுமாரன்”

“அளவெட்டிச்சிவகுமாரன்”

எனவும் அழைப்பதுண்டு.

ஆம், எழுபதுகளிலேயே (70s) எமது மக்கள் விடுதலை மீது கொண்டிருந்த பேரார்வத்தினால் அந்த ஆண்டு வீரச்சாவு அடைந்த இந்தத் தியாகியின் பெயரினை வாஞ்சையோடு சூட்டி நிமிர்வு கொண்டனர்!✊

இத்தகைய இன்னோரன்ன காரண காரியங்களினால்தான் இன்னமும் இன்னமும் எம் செம்மண்ணில் அறவுணர்ச்சியும் தியாகவுணர்ச்சியும் பெருகிக் கொண்டே இருக்கின்றது!

– அறத்தலைவன் –