26.3 C
Jaffna
Thursday, December 5, 2024
20/04/2009 காலை 2_3 மணி இருக்கும். மாத்தளன் பண்ட்ல் சண்டை தொடங்கியது, சிறிதுநேரத்திலேயே பண்ட் விடுபட்டதை மோட்டார் ஒருங்கிணைப்புமூலம் வோக்கி ஊடாக கேட்கமுடிந்து. அப்ப மாத்தளன் மருத்துவமனை, மருத்துவர்கள், நோயாளிகள்,,, ? ஆம்,,மருத்துவமனையில் இருந்து புனிதன் அண்ணா வின் CDMA தொலைபேசியில் தொடர்புஏற்பட வலையர்மடத்திலிருந்து வரதன் டொக்டர் உடன் கடற்கரையோரமாகவே land cruiser ஐ ஓடிச்சென்று மாத்தளன்கடற்கரையோரமாக land creuiser ஐ விட்டு இறங்கும்போதுதான் நிலமையின் வீரியம் புரிந்தது - மாத்தளன் BOX எண்டு,, விழுந்து, உறுண்டு, தவழ்ந்து மருத்துவமனையை அடைந்தோம், மல்லாவி மருத்துவமனைபணியாளர் ஒருவர் காயமடைந்து...
மார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் “மார்ஸ்” என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் அவர்கள் “பால்ராஜ்” எனும் தம் போர்க் கடவுளை அதிகம் நினைக்கும் மாதம் ஆகும். ஆம், இதே போன்றதொரு பங்குனியில்தான் வடமராட்சியின் கிழக்கில் தடம் பதித்து புனிதம் மிக்க அந்த வெண் மணலில் காயப்படும் எமது மக்களுக்காகவும், விழுப்புண் அடைந்து கொண்டிருந்த வீரமறவர்களுக்காகவும் மருத்துவ பணி செய்தோம்! மகத்தான பணி மூலம் ஆனையிறவு வெற்றிக்கு சின்னஞ் சிறியதோர் பங்களிப்பையும் பெருமையோடு நல்கினோம்! ஆதாலால்தான் என்னவோ.... நாங்கள் வருடா வருடம் பங்குனி மாதத்தையும் வடமராட்சி கிழக்கினையும்...
இனப்படுகொலை ஒன்றின் இன்னோர் சாட்சி இழக்கப்பட்டுவிட்டது. எமது தேசத்தின் காவல்த்துறை உயர் நிலை அதிகாரி திரு ரஞ்சித்குமார் அவர்களும் அமரராகிப்போனார். எமது மக்கள் இலங்கை இராணுவத்தால் ஆகாய கடல் தரை முனைகளிலிருந்து ஏவப்பட்ட ஆயுதங்களால் கொன்றழிக்கப்பட்ட இறுதி யுத்த சூழலில் காவல்துறை தமது சீருடையில் நின்றபடி தமது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்து. இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இடம்பெயர்வு நெருக்கடிகளிலும் யுத்தமற்ற வலயத்தில் மக்கள் சேவையிலும் போர் முனைகளிலும் வெவ்வேறு நிலைகளில் பங்காற்றிக்கொண்டு சிவில் நிர்வாக கடமைகளோடு உயிர்காக்கும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இறந்த உடல்களை அகற்றுவது புதைப்பது வரையான...
எக்களத்திலும் எக்காலத்திலும் பிறக்கவல்லது கவிதை. காதலின் புலத்திலும் கொலைக் களத்திலும் ஆடக் கூடியவன் கவிஞன். அதனால்த்தான் கவிஞன் ஆகிறான் கடமை தவறாதவன். இரண்டாயிரமாம் (2000)ஆண்டு இத்தரை பூத்துச் சிரிக்கும் சித்திரை மாதம் செம்பியன்பற்றுக்கும் இத்தாவிலுக்கும் இடையே உள்ள நீரேரி ஊடக ஒரு கவிஞரை அழைத்துச் சென்றேன். தமிழர்களின் போர்க்கடவுளையும் அவருடன் அருகிருந்த காவல் தெய்வங்களையும் தரிசிக்கச் சென்ற ஒரு புனிதபயணம் அது ஆனாலும் மிகவும் ஆபத்தான பயணம். எறிகணைகளால் மண்ணும் விண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க கவிஞர் தூயவனோ எதனையும் பொருட்படுத்தாமல் கண்டல் தாவரைத்தையும் (Mangrove) அதன் மிடுக்கான மிண்டி...
காடுகளில் காட்டாறுகள் கரை புரண்டு ஓடுவது உண்டு! கரைகளை அறுத்தோடும் காட்டாறுகள் எங்கிருந்து பாய்கின்றது? எத்திசை நோக்கிப் பாய்கின்றதென சாதாரண மனிதர்களால் கிஞ்சித்தும் பார்க்க முடிவதில்லை!   காகங்களைக் காட்டுக்கு தூதனுப்பி நாங்கள் சேதி சொன்ன காவல் தெய்வங்களை கரடிகள் காட்டுக்குள் காத்தன. இயற்கை அவர்கள் ஆசானாக மட்டும் அல்ல கடவுளாகவும் இருந்திருக்கிறது விந்தை இதுவென காட்டாறுகள் எமை வியக்க வைத்தாலும் மாரிகாலம் முடிந்தால் அவை வற்றி வரண்டுவிடும்! ஆனால்... கரடிகளோ நிலத்தின் கீழ் ஓரளவு ஆழத்தில் நீர் இருப்பதை முகர்ந்து அறிந்து கொள்ளும் தனித்துவ திறமை கொண்டவை! கரடிகள் தன் பலம் கொண்டு குழி தோண்டித்...
தாயார், தந்தையார், தாரம், தமக்கையார், தமையன்மார் போலவே எந்தன் பொதுவாழ்வுக்கும் தனிப்பட்ட வாழ்வுக்கும் நெருக்கமாகத் துணை நின்றவர் அருள் சித்தப்பா! எங்கள் கண் எதிரே பலர் கொடூரமாக சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்க தனக்கே உரித்தான சாதுரியமான புத்தியால் அந்த பேராபத்திலிருந்து என் ஒன்றுவிட்ட தம்பிமாருடன் (அவரது புதல்வர்கள்) சின்னண்ணரையும் எனையும் காத்து வயாவிளான் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்! ஆம், 1984 ஆண்டு மாங்கனித் தீவின் வட மாகாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா (Brigadier Ariyapperuma) கட்டுவன், வறுத்தலைவிளான் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி மரணமானதைத் தொடர்ந்து வீதிகள் எங்கும் துமுக்கி ஏந்திய...
(01) சாதியின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்! (02) மதத்தின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்! (03) பிரதேசவாதத்தின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்! (04) அரசியல் கட்சிகளின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்! (05) ஆளுமினங்களின், பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சியில் ஒரு போதும் வீழமாட்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்! (06) தமிழர்தம் பண்பாட்டினையும் கலை பண்பாடுகளையும் சிதைந்தழிந்து...
பசுமையையும் பழமையையும் போற்றிடும் திருமிகு நவரத்தினம் குணரத்தினம் அவர்கள் எங்கள் பெருவிருப்புக்குரிய மிக நல்ல மனிதர். வளம் பல கொண்ட வன்னி வாழ்வின் கடினங்களை நெஞ்சுரத்துடனும் "இந்த மண் எங்கள் சொந்தமண்" என்ற தீராத வாஞ்சையுடனும் ஆத்மார்த்தமாக ஏற்றுப் போற்றியே வாழ்பவர். ஆம்,அந்த மண்ணின் போரியல் வாழ்வினை வரமாக ஏற்றிப் போற்றிய நெடுந்தகை திருமிகு குணரத்தினம் ஆவார். யாழ்ப்பாணத்தில் அவதரித்த தொழிலதிபரான இவர் மாங்கனித்தீவின் பிரபலமான கல்லூரியில் கல்வி பயின்று ஓர் உயர்நிலையை அடைந்து எம் சமூகத்தை நன்னெறிக்கு இட்டுச் செல்பவர். நற்செயல்களால் தன் சகமாந்தரைத் தாலாட்டிய எங்கள் மாமருத்துவர் தி.கெங்காதரன்...
ஒது ஒருவருக்கான பாவல்ல. விடுதலைக் களத்திடை ஆடிய வேங்கைகள் உயிர்தனை காத்திட்ட மகத்துவர் ஒவ்வொருவருக்குமான பா. மக்கள் நலமிசை மேவிய மருத்துவர் ஒவ்வொருவருக்குமான நன்றிப்பா IMG_1639  
1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ் குடாநாட்டினை உலகிலேயே ஒழுக்கத்தில் சிறந்த ஒரு விடுதலை இயக்கம் ஆளுகை செய்து கொண்டிருந்தது. வள்ளுவப் பெருந்தகை திருவாய் மலர்ந்த ஒழுக்கம் செயல் வடிவம் கண்டதோர் வண்ணமிகு காலத்தை ஈழத்தமிழினம் அழ அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. சுய ஒழுக்கம், சூழ்நிலை ஒழுக்கம் என அத்தனை வகையான ஒழுக்கங்களும் நடைமுறையில் இருந்த் காலத்தில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து கொண்டிருந்த போராளிகள், தன்னிகபொதுமக்கள் அனைவரும் பெருந்தலைவர் வழிகாட்டலில் ஒழுக்கசீலராய் மிளிர்ந்தனர். யாழ் வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS