தியாகப்பயணத்தின் மூன்றாம் நாள்!
எங்கள் உறவினரான
செல்வி. சிவா துரையப்பா என்ற ஆன்ரியும் தியாகி திலீபனின் தியாகப் பயணத்தின் மூன்றாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
பிறர் நலனிலும் பொது வாழ்விலும் அதிக அக்கறை கொண்ட அவர் அச்சுவேலி எனும் திருவூரின் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்.
அந்த ஆன்ரி 17.09.1987 இல் திலீபன் அண்ணனுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்……
உறவினர் என்பதைவிட எந்தன் அம்மா, அப்பா, அண்ணை ஆகியோருடன் நல்ல நண்பராக பழகும் அவர் பசியுடன் போராடப்போகிறார் என்பது,…
எங்கள் கவலையினை அதிகப்படுத்தியது.
எங்கள் தேசம் மீதான காதலையும்
பற்றுதலையும் ஆழப்படுத்தியது.
அன்பையும் பண்பையும் எங்களுக்கு பரிசாய் அளிக்கும் அந்த ஆன்ரியும் இறந்து போய்விடுவாரோ எனும் அச்சமும் எங்களை தொற்றிக் கொண்டது….
மொத்தத்தில் தியாகி திலீபனின் இந்தப் போராட்டம் அறவழியின் உச்சிதனை தொட்ட ஒரு மக்கள் போராட்டம் என்பதை ஶ்ரீ லங்கா அரசின் பாதுகாப்புச் செயலர் புரிந்து கொள்ள வேண்டும்!
இராணுவ கண்ணோட்டமும் சிங்கள பேரினவாதச் சிந்தையும் (Sinhala chauvinistic thinkings) கொண்ட
ஶ்ரீ லங்காவின் பாதுகாப்புச் செயலாளரிடம் எங்கள் மனத்தாங்கலையும் வலியையும் (Grievances and pain) பக்குவமாய் சொல்ல வேண்டும்.
இந்த வரலாற்றுக் கடமையை அரசியல்வாதிகளுடன் இணைந்து எங்கள் புத்திஜீவிகளும் கல்வியாளர்களும் காலம் தாழ்த்தாது செய்திடல் வேண்டும்.
-அறத்தலைவன்-