ஆண்டாண்டு காலமாதாய் ஆண்டவனுக்காய் ஆடப்பட்ட காவடி முதன் முதலில் ஓர் அதிமானுடனுக்காக ஆடப்பட்டது.
ஓர் புதுயுகம் அல்லது ஒரு யுகமாற்றம் எம் கண் முன் நிகழ்ந்தது.
“யுகமாற்றம்”
“யுகசந்தி”
“யுகபுருசன்”
எனும் சொற்பதங்களுக்கான பொருளை முதன் முதலில் 1987ஆம் ஆண்டு நல்லூரின் வடக்கு வீதியில் மொழிபெயர்த்துக் கொண்டேன்!
ஆம்,
இனவிடுதலைக்காக தனை ஆகுதியாக்கிக் கொண்டிருந்த எங்கள் தியாகி திலீபனுக்காக அவர் உயிருடன் இருக்கும் போதே தூக்குக்காவடி ஆடப்பட்டது.
1987ஆம் ஆண்டில் திருமிகு மயிலு அப்பன் அவர்கள் வயாவிளான் எனும் தொல்லூரிலிருந்து இருந்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற நல்லூர் வடக்கு வீதி வரை தூக்குக் காவடி ஆடிவந்தார்.
அந்த நிகழ்வே பின் வந்த நாட்களில் தியாகி திலீபனின் தியாகச்சாவுக்கு பின்னரும் வருடந்தோறும் நினைவு நாட்களில் தொடர்ந்து வருகின்றது.