உலகத் தமிழரின் ஆத்மபலம் திலீபன்

சமர்க்களங்களில் விநியோக வழிகள் தடைப்பட்டு உணவு இல்லாமல் பசியால் வாடும் தருணங்களில்,

திலீபன் அண்ணாவின் மனோதிடத்தையும் தியாகத்தை நினைப்பது வழமை.

நினைத்தாலே போதும் ஒரு புதிய உத்வேகமும் உற்சாகம் உடலெங்கும் கொடிவிட்டுப் படரும்!

வன்னியிலிருந்து கடல்வழியாக குடாரப்பில் தரையிறங்கிய முதல் நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் மட்டும் கொண்டு சென்ற உலர் உணவு கைகொடுத்தது.

பின்னர் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி ஊடான தரை வழிப்பாதை கைப்பற்றப்படும் வரை களத்தில் ‘கடும்பசி’ எனும் நிலையிருந்தது.

பசியிருந்த அந்த நேரங்களில் திலீபன் அண்ணரின் கொடும்பசியினை நினைத்தால் எங்கள் பசி மறந்து போகும்.

வார்த்தைகளால் வடிக்கமுடியாத
கடினமான அந்த நேரங்களில்
ஆன்மா பலம் பெறும்!

ஆம்,
உடலில் உத்வேகம் பிறக்கும்!

அன்றைய செங்களத்தில் மட்டுமல்ல
இன்றைய நாட்களில் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தமிழர் வாழும் நிலம் எங்கும் இனியும் இனியும் “#திலீப_ஒளி”ஏறும்!

#உலகத்_தமிழரின்_ஆன்மபலமாய்_என்றும் இருப்பான் எங்கள் தியாகி திலீபன்!🙏