வெண்டிக்காய் சமையல்

606

வெண்டிக்காய் 250 கிராம்

பச்சை மிளகாய் – தேவைப்படும் உறைப்புக்கு ஏற்ப

பெரியவெங்காயம் – 1

தக்காளி – பெரிது – 1

பெருஞ்சீரகத் தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

வெண்டி, மிளகாய், வெங்காயம் தக்காளியை நன்கு கழுவவும்.

வெண்டியின் ஈரத்தை தூய துணியால் ஒற்றி எடுக்கவும்.

வெங்காயத்தைச் சிறு துண்டுகளாகவும் பச்சை மிளகாயை மீச்சிறு துண்டுகளாகவும் தக்காளியை சிறு துண்டுகளாகவும் நறுக்கவும்.

வெண்டியை வட்டத் துண்டுகளாக வெட்டவும்.

இரும்புச்சட்டி அல்லது wok ஐ மெல்லீசாக சூடாக்கி எண்ணெய் விடவும். எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை குறைத்து வெங்காயத்தை வதக்கவும்.

வெங்காயம் வயங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பச்சை மிளகாய் வாசனை பரவ தொடங்கும் போது தக்காளியைச் சேர்க்கவும். 

தக்காளி மென்மையாகி எண்ணெய் பிரியத் தொடங்கும் போது மஞ்சள் தூள் சேர்க்கவும்.

எண்ணெய் படர்ந்து வரும் போது ஏனைய தூள்களை அடுத்தடுத்து சேர்க்கவும். ஓரளவு வேகியதும் வெண்டியை சேர்த்து நன்றாகப் பிரட்டி உப்புப் போடவும்.

சட்டியை மூடவும். மூடும் போது மூடியை வழக்கத்துக்குமாறாக வழம் மாற்றி மூடவும். அதாவது குழியான பகுதி மேலே பார்க்கக் கூடியவாறு மூடவும்.

மூடியபின் மூடிக்குள் சிறிதளவு தண்ணீர் விடவும். (கட்டாயம் அல்ல)

அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிப் பிரட்டவும். 

வெண்டி வேகிப் பதம் ஆனதும் அடுப்பை அணைத்து சட்டியை அப்படியே விடவும்.

வித்தியாசமான சுவையான வெண்டிக்காய் ரெசிப்பி ரெடி. ரொட்டி தொட்டுக் கூட இதைச் சாப்பிடலாம்.