காக்கா இராதாகிருஷ்ணன்

416

மங்கையர்க்கரசி படத்தில் மதுரம் அவர்கள் தன் மகனைப் பார்த்துச் காக்கா பிடிச்சாவது அரசாங்க உத்தியோகம் வாங்கிட்டு வா என்பார். அவருடைய மகனும் ஒரு காகத்தைப் பிடித்துக் கொண்டு வேலை கேட்கப் போவார். தோல்வியுடன் திரும்பி வந்து தாயிடம் காக்கா பிடிச்சுட்டுப் போய் வேலை கேட்டும் வேலை கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டு தான் பிடித்த காக்காவையும் கையோடு கொண்டு வந்து காட்டுவார்.

 

அந்தக்காலம் மட்டும் அல்லாமல் இந்தக் காலத்திலும் வயிறு குலுங்க வைக்கும் இந்த நகைச்சுவௌக்குப் பின்னரே காகா இராதாகிருஷ்ணன் என்றழைக்கப்பட்டார். என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நடித்து வந்த இவர் முதல் படமான மங்கயர்க்கரசியில் தன் சிறப்பான முத்திரை நடிப்பால் தமிழ்த்திரைவானில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.

நடிகர் சிவாஜி கணேசனை நாடகத்துறைக்கு அழைத்து வந்த இவர் அந்தக்காலச் சூப்பர்ஸ்டார்களுடன் நடித்ததோடு மட்டுமல்லாமல், இந்தக் கால அஜித் விஜயுடனும் நடித்த பெருமைக்குரியவர். மூப்பின் காரணமாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த இவரை தேவர்மகன் மூலம் சிவாஜியின் தம்பியாக்கி வீராப்பு மிகுந்த வில்லனாக மறு பிரவேசம் செய்ய வைத்து இறக்கும் வரை நடிக்கவைத்த பெருமை கமலகாசனையே சாரும்.

தமிழ்த் திரை உலகில் மறக்க முடியா காகா இராதகிருஷ்ணன் மறைந்த தினம் இன்று.