வயாவிளான் மானம்பிராய்ப் பிள்ளையார் ஆலய வழிபாட்டில் குறைந்தளவு மக்கள் கலந்து கொள்வதன் பின்னணி. – 03

202

வயாவிளானின் ஒற்றுமை சாதிக் கோடுகளால் மட்டும் சிதைக்கப்படவில்லை. இன்னும் பல கோடுகளாலும் அது சிதைவுண்டுள்ளது.

பெரியளவில் பிணக்குகள் இல்லாவிடிலும் மிக மெல்லிய மதக் கோட்டினால் வயவர்கள் பிரிக்கப்பட்டிருந்தார்கள். 

கிருத்தவர்களும் சைவர்களும் வாழ்ந்த வயாவிளானில் மதவாதம் இருக்கவில்லை. ஆனால் மெல்லிய பிரிவினை இருந்தது.

போர்ச்சூழல் காரணமாகச் சில சமயங்களில் மனிதாபிமானம் அந்தப் பிரிவினையை தற்காலிகமாக அழித்திருந்தாலும் முற்றாக அது அழியவில்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் மத ரீதியான அந்த சின்னப் பிரிவினையை தற்காலிகமாகவேனும் அழிக்கும் வாய்ப்பு சைவப்பக்கத்துக்கு வாய்க்கவில்லை. 

ஆனால் இப்போது இரு சாராருக்கும் அத்தகைய நல்வாய்ப்பு வாய்த்துள்ளது. வயாவிளானின் விடுவிப்புக்காக மதங்களை மறந்து மனங்கள் ஒன்றுபட்டு அவ்வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.

ஒன்றுபட்ட வயவர்கள் மானம்பிராய்ப் பிள்ளையார் ஆலய சிறப்பு வழிபாடுகளில் மட்டுமல்லாது ஏனைய ஊர் விடுவிப்புக்கான முன்னெடுப்புகளிலும் பங்கெடுக்க வேண்டும்.

இதன் மூலம் வயாவிளான் மானம்பிராய்ப் பிள்ளையார் ஆலயம் எங்களுக்குக் கிடைப்பதும் எங்கள் ஊர் எங்களுக்கு முழுமையாகக் கிடைப்பதற்குமான பாதை திறக்கப்படும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், இந்த ஒற்றுமை சந்தர்ப்பவாத ஒற்றுமையாக இல்லாமல் நிரந்தரமானதாக இருக்க வேண்டும். 

அப்போதான் வயாவிளான் உண்மையில் மறுமலர்வு அடையும். 

இதையும் நிர்வாகங்களும் அமைப்புகளும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு வயவனும் இதற்கான முனைப்பில் ஈடுபட வேண்டும்.

எங்களூரில் சாதி, மதத்தை விட வேறு எதுவும் எங்களைப் பிரிக்கவில்லையா என்ற கேள்வி பலருக்குள் எழலாம். வேறுமாதிரியான பிரிவினைகளும் எங்களுக்குள் இருந்தன என்பதே பதிலாகும். 

-தொடர்ந்து உரையாடுவோம்-