நிசப்தம் நிறைந்திருக்க எல்லாரும் அண்ணாந்து பார்த்துக் காத்திருந்தனர். எந்த நேரமானாலும் வந்து விழலாம். எந்த நிலையிலாவது வந்து விழலாம். எந்த அளவிலாவது வந்து விழலாம். எதுவுமே தெரியாத நிலை.. ஆனால் விழத்தொடங்கியதும் வேலை.. வேலை… வேலைதான்..

திட்டமிட்ட நேர அட்டவணையின் படி இன்னும் சொற்ப விநாடிகளே.. எல்லாரும் அதி உச்ச ஆயத்த நிலையில்.. … …. …. ம்கும்.. எதுவுமே விழவில்லை.. காலம் கடக்க.. எல்லாரிடத்திலும் பதட்டம் அதிகரிக்கிறது.

இன்னும் காலம் தாழ்த்தினால் தங்களாலேயே தங்களுடைய சக பணியாளர்கள் காயமுறவோ அழிக்கப்படவோ கூடும். அந்த நினைப்பு எல்லார் முகத்திலும் கலவரத்தையும் கவலையையும் ஒட்டியது.

சற்று நேரத்திற்கெல்லாம் அம்லக்கசிவு நிலமை கட்டு மீறி, அமிலக்கசிவு ஏற்படப்போவதற்கான இரைச்சல் சமிக்கை எழுப்பப்படுகிறது. 

அந்த சமிக்கையின் பின்னாவது  வந்து விடும் என ஏக்கத்தோடு காத்திருக்க அமிலக்கசிவு ஏற்பட்டு எங்கும் பரவத் தொடங்கியது. பலர் பாதிக்கப்பட்டனர். இன்னும் கொஞ்ச நேரம் இதே நிலை நீடித்தால் அமிலம் அரித்து இரத்தம் கசியக் கூடும் என்ற அபாயக்கட்டத்தில் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பப்படுகிறது. கட்டுப்பாடு மையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அமிலக்கசிவால் நலக்குறைவுக்கு ஆளானவர்களின் முனங்கள் இரைச்சலாக வெளியேற்றப்படவும் கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து நல்ல சேதி வருகிறது. அடுத்தடுத்த சில மணித்துளிகளில் கவளம் ஒன்று வந்து விழுகிறது.

சரியான அளவில் எச்சில் கலக்கப்படாமல், பதமாக அரைக்கப்படாமல் வந்து விழுந்த கவளத்தைக் கூழாக்க அதில அமிலம் தேவைப்படுகிறது. நியமிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வேலை செய்து கவளத்தின் மேல் அமிலம் பாய்ச்சி கூழாக்க முனைகிறார்கள்.

பாதி அளவில் கூழாக்க முன்னரே அடுத்த கவளம்.. இவ்வாறு நியமிக்கப்பட்ட சீரான கால இடைவெளியை விட குறுகிய கால இடைவெளியில் கவளங்கள் வந்தடைய மேலும் மேலும் வேகமாக வேலை செய்ய வேண்டிய அழுத்த நெருக்கடி எல்லாருக்கும்..

இருந்தாலும் எல்லாத்தையும் சமாளித்து கவளங்கள் மேல் அமிலம் பாய்ச்சி கரைத்துக் கூழாக்கி, அடுத்த கட்டத்துக்கு அரையும் குறைய்மாக வைக்கப்படுகிறது. அங்கேயும் அதே நிலை.. அதிகப்படி வேலை.. நியமம் மீறப்பட வேண்டிய தேவை.. தொடர்ந்து இதே நிலை நீடிக்க சிஸ்டம் பழுதடையத் தொடங்குகிறது. அபாயக் கட்டம் நம்மை நெருங்குகிறது…

ஆம்.. எமது சமிபாட்டுத் தொகுதி ஏற்கனவே கட்டளைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் படி இயங்கும்படி உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த சிஸ்டம் கெடாமல் இருக்க,

நான்கு மணி நேர இடைவெளியில் உணவு உண்ணும் பழக்கத்தை நாம் உணவை உட்கொள்ள வேண்டும்.

பற்களால் நன்றாக அரைத்து விழுங்க வேண்டும்.

அவசரா அவசரமாக உண்ணக் கூடாது.

மூக்கு முட்ட உண்ணக் கூடாது.

ஆரோக்கியமானவற்றை உண்ண வேண்டும்.