வளமான நிலம் மீது களமாடினார் – என்றும்
தமிழ் கூட மறவாத மரபாகினார்
போராடும் துணிவோடு அவர் புலியாகினார் – என்றும்
கவி புணையும் கவிஞருக்கு மொழியாகினார்
உடலுக்குள் அவர்
சுமந்தார் நெருப்பு
புலிகளுக்குள்
அது தானே சிறப்பு
உயிரான தமிழுக்கு உறவாகினார்
அதன் உயிர் காக்க தன் உயிர் போக்கினார்
கடமை தவாறாது நின்று பணியாற்றினார்
கொடுமைப் பகையோட புயலாகிப் புகழாகினார்
தனித்தேசம் ஒன்றே புலிகளின்
ஆத்மாவின் தவிப்பு
களப்பள்ளியில் அது தானே
அவர்கள் படித்த படிப்பு
விலங்கொடிக்க உயிரை அவர் திறப்பாக்கினார்
அன்னை மண் மீது வீரத்தின் பிறப்பாகினார்
அணையாத அனலாகி எரிமலையாகினார்
ஆன்றோர்கள் ஆளவே
அவர் விரும்பிக் களமாடினார்
உள்ளத்தில் உள்ளதெல்லாம்
விடுதலையின் கொதிப்பு – அவர்
உணர்வோடு இருப்பது
உண்மையான துடிப்பு
தங்கள் பருவத்தின் பயனை
அவர்கள் பயனாக்கினார்
வரும் எதிர்காலச்சந்ததியின்
பயன் நோக்கினார் – உயிர் திறந்து
உயிரெழுத்தில் மறுபிறப்பாகினார்
என்றும் இறவாது தமிழோடு அவர் வாழுவார்
உயிர்களுக்குள் அவர்
உன்னதத்தின் உயிர்ப்பு
அவர்கள் பிரபாகரன்
எழுதிய வீரத் தொகுப்பு