என் சுவாசக் காற்றே..

514

இயற்கை (இறை) காற்றில் 20% ஆக்சிஜன் அளவை நிர்ணயித்தது –
ஒரு காரணத்தோடுதான்!

அதற்குமேலான விகிதத்தில் ஆக்சிஜன் இருந்தால் காய்ந்த மூங்கில் காடுகள்
தாமாகவே பற்றி எரிந்துவிடும்.. (Spontaneous Combustion)
கோடையில் நம் கூரைவீடுகளும்தான்..

காற்றுக்கும் ஆக்சிஜன் அளந்துதான் வச்சிருக்கு…

இந்த ஆக்சிஜன் அளவு காடுகளை , மரங்களை அழிப்பதாலும்
வேதிப்புகை,மாசு -தூசுகளை மனிதச் செயல்கள் கலப்பதாலும்
குறையும் என்பது அனைவரும் அறிந்ததே

கண்ணைத் தொறந்துகிட்டே கெணத்துல…

ஆரோக்கியமான சூழலில் காற்றும் சுத்தமே..
அதன் ஒரு சதம் வரை தூசு, தும்புகள் இருப்பது சகஜமே..
அண்ணா சாலை,கிண்டி…ஓஓஓஓஓஓஓ!
காற்று அங்கு மிக மிக அசுத்தமே…

ஆமாமாம். ஹிண்டுவில் சின்னதா அப்பப்ப அளவீடு வரும்..அதை
எல்லாம் அப்பப்ப மறந்திடுவோம்…

பழைய பல்லவனும், கெரஸினில் லாரி ஓட்டும் வல்லவனும்
விடும் புகையை தனிமனிதன் இப்பக்கி தடுக்க முடியாது..

ஏஸி கார், கர்ச்சீப் – பிளாஸ்டிக் மாஸ்க் முகமூடின்னு
மார்ஸ் கிரகவாசியாட்டம் மாறுவேஷத் தற்காப்பிருக்கே..

காற்றில் உள்ள புகை கலந்து சில சதம் அதிகரித்தாலே
உடல்நலக்கேடுன்னு தெரியும் மனுசனுக்கு
குறிவச்சு பாதிக்காற்று, பாதிப்புகைன்னு நுரையீரலை
இம்சிக்கும் சிகரெட் -பீடிகளை என்னன்னு சொல்ல?

கெட்டதுன்னு தெரிஞ்சும் ஒரு த்ரில் இருக்கே
சின்ன வயசில் பழகிட்டா சில தகா பழக்கங்கள்
பின்னால் விலக்குறது லேசா லேசா?
கட்டுரை எழுதற நீங்க மட்டும் ஒழுங்கா?

லாவ் இங்கே வாங்களேன்..

நம் இரண்டு நுரையீரல்களிலும் எந்நேரமும் 5 -6 லிட்டர்
காற்று நிரம்பி இருக்கு.

ஒரு சுவாசத்தில் அரை லிட்டர் காற்றை உள்ளே இழுத்து
அதே அளவை வெளியேத்துறோம் (Tidal volume = 500 ml)

ஒரு நிமிடத்துக்கு 10 -12 முறை சுவாசக்கணக்கு.
ஒரு நிமிடத்தில் 5 -6 லிட்டர் காற்று உள்ளே போய் வெளியே வருது.

ஒரு சதம்னாலும் இதில் உள்ள தூசு தும்பை அதோடு சேர்ந்துவரும்
பாக்டீரியா, வைரஸ், காளான் நுண்கிருமிகளை
கணக்கு பண்ணிப்பாருங்க…

சுவாசக்குழாய் (trachea) தலைகீழான மரமா கற்பனை பண்ணிக்குங்க.
வலது, இடது என இரு பிராதான கிளைகள். (Right and Left Main Bronchus)
ஒவ்வொரு கிளையும் பின் இரண்டு மூன்று துணைகிளைகள்..அப்புறம்
மேலும் கிளைகள்… இப்படி 20 தடவை கிளை பிரிங்க..
கடைசியா சின்ன கம்புகளில் இலைகள் இருக்குமில்லியா
அதைப்போல நம் சுவாசமண்டலமும் சிறு மெல்லிய குமிழ் இலைகளில் முடியுது.
(alveoli).

இந்த இலைத்தொகுப்பின் இந்தப்பக்கம் ஆக்சிஜன் நிறைந்த காற்றை நாம்
உள்ளிழுத்து பரவவிட

அந்தப்பக்கம் கொடியில் தொங்கும் சேலைக்கு
சாயம் போடுபவன் போல் மெலிசா, பரவலா, சீரா அசுத்த ரத்தம்
கார்பன் -டை-ஆக்ஸைடோடு காத்திருக்க…

ஆக்சிஜன் உள்ளாகி, கரியமில வாயு வெளியாகும்
ஆதார ஜீவச்செயல் இடைவிடாமல் நடக்குது அங்கே…

அது நடக்கும் ஆல்வியொலை( அதாங்க இலை) எல்லாம் விரிச்சு
பரப்பி அளந்தா… ஆத்தாடி..
100 -200 சதுரமீட்டர் இருக்குமில்ல..

ஒரு டென்னிஸ் கோர்ட் அளவு இலைப்பரப்பை
நம் நெஞ்சுக்கூட்டுக்குள் குன்சா அமுக்கி வைத்த
இயற்கை -இறை… ஆஹா

தூரப்பயணம் போகையில சூட்கேஸ் பேக் பண்ண
அவர் -அது ஹெல்ப் பண்ணா நல்லாருக்கும்னே..

லாவ், நம்ம

ஒரு சதுரமீட்டர் உள்ள வீட்டு தேக்குமேசையை
எத்தனை முறை தொடைச்சாலும் எப்படி விரைவா
தூசு படியுது…இத்தனைக்கும் காத்து மென்மையா
மேசையை வருடிப்போகும்போதே இப்படி!

வருடத்துக்கு எட்டு மில்லியன் முறை ஒரு சதம் தூசு
உள்ள காற்றை ஆக்டீவ்வா உள்ளிழுத்து
200 மீட்டர் இலைப்பரப்பில் வீசி அடிக்கிறோமே
அப்போ எவ்வளவு தூசு சேரும்..
யாரு அதைத் தொடைச்சி பராமரிக்கிறா?

மாசுக்கட்டுப்பாடு வாரியம்

முதல் பணியாளர்: நாசி
பெரிய தூசு வந்தால் தும்மல்..
நம் சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர் போல்
உடனே வெளியேற்றப்படுவார்.
கொஞ்சம் சின்னதா இருந்தால்
நாசிச் சளிப்படத்தில் சிக்கி
பொன்னிற அழுக்காய் வெளியேறிவிடுவார்.

(கோல்ட் டிக்கிங் கோவிந்து..)
லாவ்: சின்னதம்பி..இங்க வாங்க..

அடுத்து சுவாசக்குழாய் முழுமையும்
மெல்லிய மயிர்க்கால்கள் போல்
cilia இருக்கு. அதன் மேல் கன்வேயர் பெல்ட் போல்
ஒஎஉ மென்சளிப்படலம் இருக்கு. சிலியா எந்நேரமும்
தொண்டை நோக்கி இந்த பெல்ட்டை நகர்த்திட்டே
இருக்கு. மாட்டிய சின்னஞ்சிறு தூசு, கிருமிகள்
இந்த பசை பெல்ட்டில் படிந்து தொண்டை
வந்தவுடன் நம்மை அறியாமலே
“கூட்டி” விழுங்கிடுவோம்..

அமிலமுள்ள வயிறு கிருமிகளை கொன்றுவிட
அரைக்கிலோ கோழிக்கறி செரிக்கும்
வயிறு அந்த தூசுகளை தூசாய் மதித்து
செரிமான மயான வழியில் சேர்த்துவிடும்..

ஆனாலும் நுரையீரலில் வைரஸ், பாக்டீரியா
பாதிப்பால் அதிகமாய்க் கிருமிகள்
இந்த பசைப்படலத்தில் வந்து
வயிற்றில் சங்கமித்தால்
அமில தாக்குதல் தப்பித்த கிருமிகள்
வாந்தி பேதி உண்டுபண்ணும்..
(stomach flu, gastric flu)

எந்த அமிலத்துக்கும் சாகாத பாக்டீரியா
சில உண்டு. அதில் ஒன்று டி.பி. (TB)
(Acid-Fast Bacilli =AFB
அமிலத்தில் சாகாத நீள்பாக்டீரியா)
அதனால் சளியில் தேடி இக்கிருமி கிடைக்கலன்னா
இல்ல குழந்தையால் சரியா சளி துப்பி குடுக்க முடியலன்னா
விடியக்காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் நீரை
உறிஞ்சி (Gastric Aspirate)அதில் AFB தேடுவார்கள்.