James Bond படங்களில் கற்பனை வாகனங்கள் பல பயன்படுத்தப்பட்டிருக்கும். அவை பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியம் அற்றவையாகவே கருத்தப்படுகின்றன. அவ்வகை வாகனம் ஒன்று பாரீசில் நடைமுறைக்கு வந்து விட்டது.
2050 ஆம் ஆண்டளவில் வாகன நெரிசலால் பாரிய நெருக்கடியை உலகம் சந்திக்க உள்ளது. அதற்கு முன்னதாக வேறுப் போக்குவரத்து சாதனங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய சவால் முன்னால் உள்ளது. பறக்கும் மகிழுந்துகளும் (பறக்கும் தட்டுகள்) மிதக்கும் உந்துகளும் பலருடைய மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்க பாரிசில் மிதக்கும் மகிழுந்து (Sea Bubbles) பாவனைக்கு வந்துள்ளது.
பாரிசு நகரைச் சுற்று சென் நதி ஓடிக்கொண்டிருக்குறது. சுற்றுலாப் பயணிகளுக்காக இந்நதியில் நீரூடகப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை நெருங்கும் இந்நேரத்தில் இது தொடர்பாக பின்பு காண்போம்.
இந்த நதியில்தான் கடந்த புதன்கிழமை முதல் மிதக்கும் மகிழுந்து வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. 28 ஆம் திகதி வரை இந்த பரீட்சார்த்தம் இருக்கும். அதற்குள் எப்படியாவது பயணித்துப் பார்த்து விட வேண்டும் எனப் பலர் முட்டி மோதுகின்றனர்.
இருவர் மட்டும் அமரக்கூடிய இந்த மிதக்கும் மகிழுந்து நீர் மட்டத்திலிருந்து அரை மீட்டர் (50cm) உயரத்தில் மிதக்கும். தற்போது மணிக்கு 8 முதல் 12 கிலோமீட்டர் வேகம் கொண்டிருக்கும் இவ்வுந்து வருங்காலத்தில் 25km/h வேகத்தைக் கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட நிறுவனம் இதனை மேலாண்மை செய்கிறது. அந்நிறுவனம் ஆங்காங்கே மிதக்கும் மகிழுந்து துறைமுகங்களை அமைக்கும். அங்கே மகிழுந்துகள் மின்மூலம் சார்ஜ் பண்ணப்பட்டிருக்கும். அதனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாங்கள் பயணிக்க வேண்டியதுதான்.
எங்கே இறங்க வேண்டுமோ அங்கே மகிழுந்தை park பண்ணி விட்டு எங்கள் வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.
கடுகதி உலகில் இம்மகிழுந்தின் வேகம் அன்றாடப் பாவனைக்கு சாத்தியமா என்ற சந்தேகம் இருந்தாலும், எதிர்கால போக்குவரத்து நெரிசலின் வீரியம் இம்மகிழுந்தை வரவேற்கக்கூடும்.
கணமும் மாறும் உலகில் இதை விட வேறொன்று வந்து இதை முந்தவும் கூடும்.