நாளொரு குறள் – 78

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :8

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

அன்பு என்ற உணர்வு இல்லாத இல்வாழ்க்கை என்பது எப்படி இருக்கும்?

கொடிய பாலைவனத்தில் உள்ள பட்டுப் போன மரம் துளிர்த்து தளிர்விடுவது போன்று.

அதாவது அது ஒருக்காலும் நடவாது. அது வாழ்க்கையே அல்ல என்கிறார் வள்ளுவர்,
அகம் என்றால் இரு பொருட்கள் உண்டு. அகம் என்றால் வீடு என்றும் பொருள் உண்டு. உள்ளம் என்றும் பொருள் உண்டு. அன்பு உள்ளத்தில் தோன்றும் ஒரு மெல்லுணர்வு. அன்பு என்பது  நீர்போல.

எப்படி வான்சிறப்பு அதிகாரத்தில் நீரின்றி அமையாது உலகு என்றாரோ அதையே இங்கே சொல்கிறார் அன்பின்றி அமையாது அகவாழ்க்கை.