அதிஷ்ட தேவதையும் அறிவு தேவதையும்

Books HD

ஓர் ஊரில் மிகவும் வறுமையில் ஒரு விவசாயி இருந்தார். அவரிடம் ஒரே ஒரு பசு மாடு தான் சொத்தாக இருந்தது.

அந்த ரொம்ப குசும்பு பிடிச்ச மாடு வயிறு ரொம்ப தவிட்டைத் தின்னும், ஆனால் ரொம்ப குறைவா பால் தரும்.

விவசாயி பள்ளிக்கூடம் போய் படிக்கலை, அதனால கணக்கு வழக்கு பார்க்கவும் தெரியாது, லாபம் தராத மாட்டை விற்க வேண்டும் என்றும் அவருக்கு தெரியலை.

ஒரு நாள் விவசாயின் வீட்டு பக்கமாக இரண்டு தேவதைகள் பறந்து சென்றார்கள்ன. அதில் ஒருவர் அதிர்ஷ்ட தேவதை மற்றவர் அறிவு தேவதை.

அந்த நேரம் தான் அந்த விவசாயி, மாட்டுக்கு தவிட்டை குழைத்து வைச்சி, தூக்கிட்டு வரும் போது கைத் தவறி கீழே விழ, விவசாயிக்கு அழுகை அழுகையாக வந்துச்சு. அய்யோ என்கிட்ட இருந்த கொஞ்ச தவிட்டும் இப்படி ஆகிவிட்டதே, இனிமேல் மாட்டுக்கு தவிட்டை கொடுக்கலைன்னா, பால் கொடுக்காதே, பால் இல்லைன்னா தவிடு வாங்க முடியாதே, தவிடு வாங்கலைன்னா மீண்டும் பால் கொடுக்காதேன்னு புலம்பிட்டு இருந்தார்.

அவரது புலம்பலை பார்த்த அதிஷ்ட தேவதை, அவர் ரொம்ப பாவம், நான் உதவப் போகிறேன் என்று சொன்னது, உடனே அறிவு தேவதை அந்த விவசாயி பள்ளிக்கூடம் போய் சரியாக படிக்கலை, அதான் அறிவே இல்லை. நீ உதவ சென்றாலும் அதை பயன்படுத்தும் அறிவு அவருக்கு இல்லை என்றது.

அதை கேட்காமல் அதிஷ்ட தேவதை அந்த விவசாயி முன்னாடி சென்று “அய்யா! உங்க கஷ்டம் கண்டு மனம் வருந்துகிறேன், உங்களுக்கு உதவ முன் வந்திருக்கிறேன், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்க, உடனே அது நடக்கும்”. என்றது

குழந்தைகளா! நீங்களாக இருந்தால் என்ன கேட்பீங்க.

இப்போ பாருங்களேன், படிக்காத அந்த விவசாயி என்ன கேட்டாருன்னு,

”தேவதையே, எனக்கு 4 மூட்டை தவிடு உடனே கொடு” என்றார்.

அதிஷ்ட தேவதையும் தலையில் அடித்துக் கொண்டு, நாலு மூட்டை தவிட்டை கொடுத்துவிட்டு, அங்கிருந்து பறந்தது.

உடனே அறிவு தேவதை சொன்னது “இப்படி தான், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பதை ஒழுங்காக கவனிக்காம, சரியாக படிக்காமல் இருந்தால், கடைசி காலத்தில் இப்படி தான் கஷ்டப்படனும்” என்றது.

அறிவு இருந்தால் மட்டுமே அதிஷ்டத்தையும் பயன்படுத்த முடியும் தானே, குழந்தைகளா!