அரசியல்

535

அரசியல்…
இந்த சொல்தான் இன்று உலகையே ஆட்டிப்படைக்கிறது, இறைவன் 
அழகான பரந்த உலகினை படைத்து அனைத்து உயிர்களையும் வாழ இடம் கொடுத்தார்.ஆனால் இன்று அரசியல்தான் யார் யார், எங்க, எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. அதிலும் பலம்பொருந்திய நாடுகள் மற்றைய நாடுகள் எப்படி இருக்கணும் என்பதை தீர்மானிக்கின்றன.
மக்களால் மக்களுக்காக செய்யப்படும் ஆட்சியே மக்கள் ஆட்ச்சி. அதேபோல் 10 முட்டாள்கள் சேர்ந்து 9 அறிவாளிகளை தோற்கடிப்பதும் தான் அரசியல்.

மக்களுக்காக சிறந்த முறையில் சேவை செய்ய அனைத்து அதிகாரங்களும் கிடைக்கப்பெற்ற ஒரு சமூக அமைப்பே அரசியல். மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு எத்தனையோ தலைவர்கள் எத்தனையோ நன்மைகள், தியாகங்கள் செய்தனர்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்த காமராயர் என்கிற முதலமைச்சர் மக்கள் மேல் கொண்ட பாசம் காரணமாக பெற்றோருக்கு ஒரு மகனாகப் பிறந்தும் திருமணம் செய்யாது மக்கள் நலனே உயிராகக் கொண்டு செயல்பட்டு, இறக்கும் போது 3 வேட்டி, 3 சட்டை வங்கியில் மிக குறைந்த பணம் தவிர ஏதுமின்றி இறந்தார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருங்க கக்கன் அவர்கள் முதுமை காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இன்றி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று இறந்தார். இன்றைய அரசியல் வாதிகள் வசதி நிலை என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். கார் கதவு திறக்கவே ஆள் தேவைப்படுகிறது.

முன்பெல்லாம் ஒருவர் அரசியலுக்கு வர படிப்பு முக்கியம் இல்லை. காரணம் அவர் மக்கள் நலன் அக்கறை கொண்டால் போதும். இன்று ஒரு அரசியல் வாதி எண்டால் எவ்வளவு காசு இருக்கு, எப்படி மக்களை ஏமாற்றக்கூடியவர், எப்படி அட்டுழியம் செய்யக்கூடியவர், நாட்டின் சொத்துக்களை எப்படி களவாடலாம், அவர் இன ஒட்டு, சாதி ஒட்டு என்றுதான் பார்க்கின்றனர்.

 தங்கள் வசதிக்கு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள், ஆசை வார்த்தைகள் என்னும் எத்தனையோ சொல்லி ஏமாற்றுகின்றனர்.
 மக்கள் தங்கள் ஓட்டின் மதிப்பு, பலம் தெரியாது இவைகளுக்கு ஏமாறுகின்றனர். தவறான தலைவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து கஸ்ரப்படுகிறார்கள். பின் அரசியல் ஒரு சாக்கடை என வெறுக்கிறார்கள்ரா. இராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன என்பர். மக்கள் தங்கள் கடமை, பொறுப்பு உணர்த்து நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்ததுதான் அரசியல். சாக்கடை என விடுதல்; சாக்கடை மேலும் மேலும் துர்நாற்றம் எடுக்கத்தான் வழிசெய்யும். அதை சுத்தம் செய்ய வேண்டியது மக்கள்தான்.

அன்புடன்
வ.பொ.சு
==மாரிட்டி மண்ணின் மைந்தன்