கல்விப் பணியில் கைகோர்க்கக் கோரிக்கை.

649

வயாவிளான் மத்திய கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் உதவியுடன், வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்புக் காரணங்களால் உரும்பிராயில் நடைபெற்று வரும் இச்சிறப்பு வகுப்பை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களாலும் பெற்றோர்களாலும் விடுக்கப்படிக்கிறது.

அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாலை நேரச் சிறப்பு வகுப்புகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனில் பெரியளவில் நிதிவளம் தேவைப்படும். அவ்வளத்தைத் திரட்ட முயன்று வரும் பிரித்தானியக் கிளைக்கு வலுச்சேர்த்து கல்விப்பணியில் கைகொடுக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றார்கள்.

கல்லூரிப் பழைய மாணவர்களையும் அவர்கள் சார் ஊர் அமைப்புகளையும் இப்பணியில் இணைந்து செயலாற்றவும் உரிமையுடனும் அன்புடனும் அழைக்கின்றனர், வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளையினர்.

மேலதிக தொடர்புகளுக்கு

தர்மேந்திரா கிருஷ்ணபிள்ளை 
00447454000021

அருணா இராமச்சந்திரன்
00447782154403