பெருக்க மரம் – கிளை – 2

அலைவந்து தாலாட்டும் அழகிய மாங்கனித்தீவின்,

தமிழர் தேசத்தில்

1)மன்னார் பள்ளிமுனை
2) கிளிநொச்சி பூநகரி
3)யாழ் நெடுந்தீவு
4)யாழ் புங்குடுதீவு ஆகிய இடங்களில் இப் பெருக்கமரம் காணப்படுகிறது.

பெருக்கமரம்(Baobab) மடகஷ்கார் நாட்டின் தேசியமரம் ஆகும்.

மடகஷ்கார்தீவில் மட்டுமல்லாமல் ஆபிரிக்கா கண்டம் முழுவதும் நீக்கமற காணப்படுகிறது.
(இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும்)

கறுப்பு இன மக்களின் வாழ்வியலில் அது ஆழமாக இடம்பிடித்து உள்ளது.

ஆபிரிக்காவின் கானா நாட்டுப் பழமொழியிலும் இடம்பிடித்து “அறிவு/Knowledge” எவ்வாறு இருக்க வேண்டுமெனச் சொல்வதைப் பாருங்கள்.

“Knowledge is like the trunk of a baobab tree:no one’s arms are long enough to encompass it”

(Saying from the Volta region of Ghana 🇬🇭)

https://www.openstreetmap.org/node/3474525431

ஆபிரிக்காக் கண்டத்துக்கு அடுத்தபடியாக
அவுஷ்ரேலியாவிலும் உள்ளது.

அதற்கும் அடுத்தபடியாக ஆசியாவின் இந்தியாலும் உண்டு.

Lemur monkey/லெமோரியாக் குரங்கும் 🐵 இம் மூன்று கண்டத்தின் (ஆபிரிக்காவின் மடகஷ்கார், ஆசியாவில் இந்தியாவின் நீலகிரிமலை, அவுஷ்ரேலியா)
முனைகளில் மட்டும் உண்டு.
(வெள்ளைக்காரா ஆராய்ச்சியாளர்களால் நீருபிக்கப்பட்டவை)

தமிழரின் இலக்கியத்தில் இடம்பிடித்துச் சான்று பகரும் குமரிக்கண்டம்தான்
லெமொரியாக் கண்டம் என தமிழறிஞர்கள் சொல்லிவரும் இந்த நிலையில்,

லெமொரியாக்கண்டத்துக்குரிய ஆதாரமாய் Lemur monkeys 🐵 இருப்பது போல இன்னுமோர் பெருத்த ஆதாரமாய் பெருக்கமரமும் இருக்கக் கூடுமோ என எண்ணத் தோன்றுகிறது.