வேர் மொழி நம் தமிழ்மொழி

பாருள மொழிகளின் வேரென இலங்கும் தமிழில்” சீதளம்” என்பது குளிரை அல்லது குளிர்தன்மையைக் குறிக்கும்.

சமஸ்கிருத மொழியில் சீத்தல (शीतल) என்பது குளிரைக் குறிக்கும் சொல் ஆகும்.

சிங்கள மொழியிலும் சீத்தல (සීතල) என்பது குளிரைக் குறிக்கிறது.

உலகில் வயதில் குறைந்த மொழிகளில் ஒன்றான சிங்கள மொழியானது சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளின் சேர்க்கை என்பதால் இச்சொல் உள்நுழைந்திருக்கிறது எனலாம்.

ஒன்றல்ல இரண்டல்ல இவ்வாறு பல சொற்கள் சிங்கள மொழியில் உள்ளன.

உதாரணத்திற்கு இன்னொன்று लज्जा.

வடமொழியாகிய சமஸ்கிருத மொழியில் லஜ்ய (लज्जा) எனும் சொல் வெட்கத்தை குறிக்கும்.

சமஸ்கிருதம், பாளி, தமிழ் ஆகிய மொழிகளின் சேர்க்கையான சிங்கள மொழியிலும் லஜ்ஜய் (ලැජ්ජයි) சொல் வெட்கத்தையே குறிக்கிறது.