யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அபிவிருத்தி திட்டம் சம்மந்தமான முதலாவது கலந்துரையாடலாக மீள் குடியேற்றம் மற்றும் வீடமைப்பு தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டமேலதிக மாவட்ட செயலாளர் திரு.ம.பிரதீபன், மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) திரு.எஸ்.முரளிதரன், யாழ்ப்பாணம் சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் , மாவட்ட நில அளவை திணைக்களம் , யாழ்ப்பாணம் பிரதம விலை மதிப்பீட்டாளர், மாவட்ட விலை மதிப்பீட்டு அலுவலகம், நலன்புரி நிலையங்களின் பிரதிநிதிகள், மீள்குடியேற்ற குழுக்களின் பிரதிநிதிகள், மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களிலுள்ள அரச திணைக்களங்கள் ( கல்வி ), மீள்குயேற்றப்படாத பிரதேசங்களிலுள்ள அரச திணைக்களங்கள், மீள்குயேற்றப்படாத பிரதேசங்களிலுள்ள வழிபாட்டு தலங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச திட்மிடல் பணிப்பாளர்கள், நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள், பொது மக்கள், என பலர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் 01. நலன்புரி நிலையங்களில் வசிப்போர், நலன்புரி நிலையங்களின் பராமரிப்பு, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணியற்றோருக்கான காணிக் கொள்வனவு சம்மந்தமாக, மீள்குடியேற்றத்திற்கான ஆயத்தங்கள், மண் அனைகள் அகற்றுதல், பற்றைக்காடுகள் , இடிபாடுகள் அகற்றுதல், மீள்குடியேற்ற உதவுதொகை, போரினால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர வீட்டுத்திட்டம், போரினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் திருத்தம், வறுமையில் வாழும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம், இரண்டு அங்கத்தவர்களுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் , NHDA Housing Balance payment, குடிநீர் கிணறுகளின் திருத்தம் , குழாய் கிணறுகள் அமைப்பு உட்கட்டுமானம், உள்ளக வீதிகள் புனரமைப்பு . ( Bredden inre oso mare ), பாடசாலைகள் புனரமைப்பு, சுகாதாரம் சார் உட்கட்டுமானங்கள், வாழ்வாதாரம், விவசாயம், கடற்றொழில், பனைசார் உற்பத்திகள், சுயதொழில்,. இந்தியாவிலிருந்து திரும்பிய குடும்பங்களுக்கான வசதிகள் போன்ற பல தரப்பட்ட விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணாமல் போன குடும்பங்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு அரச வீட்டு திட்டங்களில் முன்னுரிமைப்படுத்துமாறு அதிகாரிகரிகளை அங்கஜன் இராமநாதன் அறுவுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் கீழ் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பணிப்புரையின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் திணைக்களங்களினால் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு தற்போது நடைமுறைப் படுத்தப்படவுள்ள அரச வீட்டு திட்டங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டு திட்டங்கள் மீள் குடியேற்ற அமைச்சின் வீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு இல்லாத பெண் தலைமைத்துவ குடும்பங்களை முன்னிலைப்படுத்தி குறித்த வீட்டுத் திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்
மேலும் வலிவடக்கு மீள் குடியேற்ற பிரதேசத்தில் மீள் குடியேற்றப்படாமல் அகதி முகாம்களில் வாழும் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள் குடியேற்ற அரச காணிகளை அடையாளப் படுத்துமாறும் அல்லது தாங்கள் விரும்பிய காணிகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிக்கேற்ற வகையில் குறித்த காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
யாழில் உள்ள கருவேல மரங்களை அழித்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் .
நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த தாவரம் யாழ் மற்றும் தீவகப் பிரதேசங்களில் அதிகம் வளர்ந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் குறித்த தாவரத்தின் வளர்ச்சி அதிகமாக பரம்பலடைந்தால் யாழ்ப்பாணம் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூட்டத்தின் போது பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.
ஆதலால் குறித்த தாவரத்தின் பரம்பலை கட்டுப் படுத்துவதற்கும் குறித்த தாவரம் அதிகம் வளர்ந்துள்ள பிரதேசங்களில் ஏற்படுகின்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்கும் முகமாக யாழ் பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த தாவரத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரமுள்ள ஓர் உப குழு அமைப்பதாக அங்கஜன் இராமநாதன் உறுதி உறுதியளித்தார்.