குரு இருக்காரே குரு அவர் தன்னைத் தானே சுத்திக்க ஆகற காலம் 10 மணி நேரத்துக்கும் கொஞ்சம் குறைவு.
குரு கோளமா இருந்தாலும் நடுப்பகுதி குண்டா இருக்கும். உயரம் கொஞ்சம் குறைச்சல். நம்ம பூமி மாதிரியே..
அப்புறம் இதில அதிகமா இருக்கிறது என்ன தெரியுமா? ஹைட்ரஜனும் (89%)ஹீலியமும்தான்(10%). மிச்சம் கொஞ்சமா அம்மோனியா, நியான், மீத்தேன், தண்ணி, கொஞ்சம் கற்கள் வெறும் கேஸ் தானா குருன்னு யோசிக்காதீங்க.. வாயுவா, திரவமா, திடப்பொருளா இப்படி அனைத்து வடிவங்களிலும் இதே ஹைடரஜனும் ஹீலியமும் இருக்கு.
சூரியனிலும் ஹைட்ரஜனும் ஹீலியமும்தான். இங்கயும் ஹைட்ரஜனும் ஹீலியமும்தான். ஆனால் குரு சூரியன் ஆகலை. காரணம் அணுக்கரு பிணைப்பை உண்டாக்கும் அளவுக்கு வெப்பம் உருவாக இன்னும் பல்மடங்கு பெருசா இருக்கணுமாம்.
குருவோட கரு பூமியைப் போல 10 லிருந்து 15 மடங்கு வரை பெரிதான திடப்பாறைகள்..(முக்கியமா ஹைட்ரஜன், ஹீலியம்
அப்புறம் அதுக்கு மேல திரவ வடிவலான வாயுக்கள்.. அப்புறம் அதுக்கு மேல வாயு வடிவலான வாயுக்கள்..(ஹைய்யோ ஹைய்யோ)
இந்த திரவ வடிவிலான ஹைட்ரஜன் இருக்கே,, அங்கே அதிப்யங்கர அழுத்தம் இருக்கும்.. பல்லாயிரம் மடங்கு நமது கடல் ஆழத்தை விட, இந்த திரவத்தை திரவ உலோக ஹைட்ரஜன் அப்படின்னு சொல்றாங்க. எவ்வளவு அழுத்தம்னா, நமக்கு கண்ணா முழி பிதுங்கிப் போறதைப் போல ஹைடரஜனில் உள்ள புரோட்டானும் எலெக்ட்ரானும் கூட பிதுங்கிறுது..
திட உட்கரு மேல இந்த திரவ ஹைட்ரஜன் இருக்கறதாலயும், இப்படி திருமண வாழ்க்கை பிரஷர் தாங்காம எலெக்ட்ரானும் புரோட்டானும் டைவர்ஸீக்கு அலையற கணவன் மனைவி மாதிரி அலையறதாலும், குருவில் மிகச் சக்தி வாய்ந்த காந்தப் புலம் உண்டாகுது…பூமியை விட 14 மடங்கு சக்தி உள்ளது.
காந்தப் புலம்னா அடுத்தது என்ன? கரெக்ட் சிவா.ஜி துருவ ஓளி ந்டனம். இது குருவிலும் உண்டு..
குரு தன்னைத் தானே சுத்திக்கறதில இன்னொரு விஷேசம் என்னன்னா, மையப்பகுதியை விட துருவப் பகுதிகள் கொஞ்சம் ஸ்லோதான்.. 5 நிமிஷம் மெதுவாச் சுத்துது..
குரு ஒரு திருமணமான ஆனால் திருமணத்தை இரகசியமா வச்சிகிட்டு இருக்கிற கிரகம்.
புரியலையா? குருவும் மோதிரம் போட்டுகிட்டு இருக்கிற, அதாங்க சனிக்கு இருக்கே அது மாதிரி வளையம் (குருவுக்கு 3 வளையம் இருக்கு, ஆனா சாதாரணமா தெரியாது) போட்டுகிட்டு இருக்கு, இந்த வளையத்தில் இருப்பது எல்லாம் ஐஸ் கலந்த தூசுகள்.
[media]http://upload.wikimedia.org/wikipedia/commons/2/29/PIA01627_Ringe.jpg[/media]
அப்புறம் குரு தன்னோட அச்சில் 3.03 டிகிர்தான் சாஞ்சு இருக்கு, இதனால பருவ கால வேறுபாடுகள் ரொம்பவும் கம்மி.. ஆனா… ஆனா எக்கச்சக்க புயல்கள் உண்டு…