இறைவன் மனிதர்களை படைக்கும்போது extra fitting
வைத்தது போல் கோவம், ஆணவம், அகங்காரம், கர்வம் இவைகளையும் சேர்த்து படைத்து விட்டார்.
குழந்தையில் ஏதுமறியது குழந்தையும் தெய்வமும் ஒன்று என இருக்கும் நாம், வளர, வளர நல்ல ,தீய குணங்களும் வளர்ந்துகொண்டே போகிறது.
நல்ல குணம் முற்றாக இருந்தால் மிகவும் சிறப்பு, பெரும்பாலும் மனிதன் பாதி, மிருகம் பாதி என ஆகி விடுகின்றான். சிலருக்கு தீய குணமே
வாழ்க்கையாகிறது. முந்தைய பிறப்பின் பாவ, புண்ணியங்கள் எனத் தோன்றுகின்றது.
எந்த பெரிய மனிதராய் இருந்தாலும் கோவம், கர்வம் தலையில் குடிகொண்டு ஆட்டிப்படைக்குமானால் அழிந்துவிடுவார்கள். அநீதியை கண்டு கோவம் கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
மது எப்படி மூளையை திடமாக செயல்பட விடாமல் செய்கிறதோ, அதேபோல் கோவம் கட்டுப்பாட்டை
இழக்கும் போது மனிதர் அறிவை இழக்கிறார்கள்.
அதனால் எவ்வளவு பெரிய அழிவுகள், இழப்புகள், தீமைகள், துன்பங்கள், துயரங்கள் ஏற்படுகிறது.
இறைவனின் தொண்டர்களான முனிவர்கள் கடும் கோவம் கொண்ட கதைகள் பல. எத்தனையோ
இனங்கள், நாடுகள் அழிந்திருக்கின்றன.
மதம் பிடித்த யானை எப்படித் தன்னை வளர்த்த பாகனையும் கொன்று, அனைத்தையும் அழிக்கிறதோ, அதுபோல் சில மனிதர்கள்
இரக்கம், நீதி இன்றி நடக்கின்றனர். சிறந்த உதாரணம் ஈழத் தமிழர் இரக்கம், நீதி இன்றி அழிக்கப்படட்து.
என்னைக் கேட்க நீ யார்? நீ சொல்லி நான் கேட்ப்பதா? நீ யார் அறிவுரை சொல்ல, கட்டுப்படுத்த என ஆணவம், கோவம் கொண்டு நடக்கின்றனர். தங்கள் செய்வது, சொல்வது
சரியென கர்வம் கொண்டு ஆடுகின்றனர். தங்களுக்கு அடிபணியாதவர்களையும்,
நீதியைக் கேட்பதையும் பார்த்து பொறுக்க முடியாது
அவர்களை அழிக்கின்றனர், தாக்குகின்றனர். கேவலப்படுத்துகின்றனர்.
மற்றவர்களிடம் இல்லாத திறமை எங்களிடம் இருந்தால் இறைவன் அருள் என பணிவு கொண்டு
நன்மை செய்வோம். மற்றவர்களுக்கு என்ன தெரியும் என கர்வம் கொள்ளாது எல்லோரையும் சமமாக மதிப்போம்.
அன்பு, கருணை, பாசத்தால் நல்ல மனிதர்களாக இருப்போம்.
அன்புடன்
வா.பொ.சு—-
வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்