மானம்பிராய்ப் பிள்ளையாரை வழிபட குறைந்தளவு மக்களே கூடியதன் பின்னணி

155

தைத்திருநாளை முன்னிட்டு மானம்பிராய்ப் பிள்ளையாரை வழிபட வருமாறு அழைத்திருந்தனர். ஆனால் கூடிய மக்களின் தொகையோ பத்துக்குள் இருந்தது.

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலய வழிபாட்டில் மகிழ்வு அளிக்கக் கூடிய அளவில் மக்கள் கலந்து கொள்கின்றார்கள்.

வரப்புலம் தான் தோன்றிப் பிள்ளையார் ஆலய வழிபாட்டிலும் திருப்தி தரக்கூடிய அளவில் மக்கள் கலந்து கொள்கின்றார்கள்.

புனித யாகப்பர் ஆலய வழிபாட்டிலும் உத்தரி மாதா ஆலய வழிபாட்டிலும் அதிகளவு மக்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்நான்கு ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ளும் மக்களில் பாதிப்பேர் தைத்திருநாளில் கூடி இருந்தால் எண்ணிக்கை நூறைத் தாண்டி இருக்குமே!

மானம்பிராய்ப் பிள்ளையார் ஆலயத்தை இராணுவப் பிடியிலிருந்து விடுவிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமே!

இவை இரண்டும் இயலாமல் போனதற்கான காரணம்தான் என்ன? 

இக்கேள்விக்கான பதிலில் வயவையூரின் முழுமையான விடுவிப்புக்கான ஊட்டம் கிடைக்கும்..

 -மீண்டும் உரையாடுவோம் –