மீண்டும் ஒரு சுதேச நாட்டியம்

முப்பெரும் தேவியருடன் உத்தரிய மாதாவும் கைகோர்த்து நடந்த வயவையில்,

முத்தமிழின் காவலர்கள் தவழ்ந்த
வயவை அன்னையின் தங்கமேனியில்…

முட்கள் முளைத்ததேன்…?

முருகா நாம் செய்த பாவமென்ன?
முப்புரம் எரித்த சிவனாரே
நாம் செய்த பாவமென்ன?

முள் முடித்த தரித்த யேசு பிரானே
நாம் செய்த பாவமென்ன?

மூதேவி வலாயம் போதும் பகையே
முழு நிலத்தையும் விட்டு விலகு! -இனி

சீதேவி வாலாயம் செய்யவிடு சிங்கபாகு மகவே!

 

மூகாரி இராகத்தை நிறுத்து-நாம் 
பூபாளம் இசைக்கவிடு பகையே! 

வேட்டொலி போட்டு நீ ஆடிய ஆட்டம் போதும் பகையே,

சலங்கையொலியும்,

சங்கொலியும் கேட்ட எம்மூரில்! 

மீண்டும் தமிழோசை கேட்கவிடு பகையே!

“சுதேசநாட்டியம்”பத்திரிகையுடன் “யாழ்ப்பாண வைபவ கெளமுதி”யின் 2ஆம்
பாகமும் வெளியிடவேண்டும் விட்டு விலகு  பகையே!

விட்டுவிடு பகையே முழுதாய் பலாலியையும்
விட்டு விலகு  சிங்கப்படையே!

குறிப்பு:வயாவிளானில் “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்ற பெயரில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றினை பொத்தகமாக எழுதி வெளியிட்டவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஆவார்.

இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் மாங்கனித்தீவின் வடமாநிலத்தில் “சுதேசநாட்டியம்” என்ற பத்திரிகையையும் வெளியிட்டு சமூக சீர்திருத்தக் கருத்துகளை எம் மண்ணில் விதைத்தவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்ற வயவன் ஆவார்.
நன்றி
-வயவையூர் அறத்தலைவன்-