வயாவிளான் பெருங்கிராமம் இன்னொரு கோலாகலத் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. அவ்விழாவின் மையமான புனித யாகப்பர் ஆலயம் திருவிழாவுக்காக புனரமைக்கப்பட்டு வருகிறது.
அவ்வாலயத்தின் திரும்பண்டகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கல்லறை ஆண்டவர் சூசைப்பிள்ளை ஆசீர்வாதம் ( கொன்சி செல்வராஜா) என்பவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
கிராமத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் புனித யாகப்பரின் திருச்சொருபம் வைப்பதற்கான பணிகள் திரு.சவரிமுத்து டேவிட் குடும்பத்தினரின் அன்பளிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு வயவைப் பெருங்கிராமம் மகிழ்விழா ஒன்றை எதிர்கொள்ள உள்ளது.
வயவன் இணையம் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல், எமது உரிமைகளில் ஒன்றான சொந்த நிலத்தில் வாழும் உரிமையை மீட்டெடுக்க, இது போன்ற திருவிழாவை வயவையின் மாபெரும் மகிழ்விழாவாகக் கொண்டாட வேண்டும்.
மீண்டும் எம் மக்களுக்கு அதனை நினைவூட்டி இவ்விழா சிறப்பாக நடைபெற சகல வழிகளிலும் தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறது.