ஆறும் அறுபதும்.. காலக் கணக்குகளும்… வாழ்க்கை நோக்குகளும் – 02

80 வருஷம் அப்படீன்னு சொல்ல ஒரு விஷேசம் இருக்கு தெரியுமா?
 
ஒரு வருஷத்துக்கு 365.25 நாட்கள். அப்படின்னா 80 வருஷங்களுக்கு 29220 நாட்கள். இதை 29 ஆல வகுப்போம். 1007.58
 
இன்னாடா தாமரை கணக்கு பண்ணுறாரே அப்படின்னு யோசிக்காதீங்க..
 
80 வயசில் 1008 பௌர்ணமி பார்த்திருப்போம் அப்படீங்கறதை தான் இந்த சின்னக் கணக்கு சொல்லுது..
 
இது ஒரு முக்கியமான மேட்டர் இல்லியா?
 
அப்பால அண்ணாத்தே இன்னா சொன்னாரு
 
பகல் – இரவு கணக்கு…
 
எப்படி  20, 40, 60 அப்புடிக்கா வாழ்வில் எப்படி பொறுப்பு மாறுதோ
 
அதாவது
 
0 வயசில பொறந்தோம்
20 வயசுல கண்ணாலம்…
40 வயசுல குழந்தைக்கு கண்ணாலம் பண்ணி வச்சோம்
இது பகல்
 
60 வயசில முதுமை வாழ்க்கை ஆரம்பம்
அப்படி 60-80 ல முதியவரா வாழ கத்துக்கறோம்..
80 – 100 முதியவர்களா வாழறோம்
100-120 முதியவர்களுக்கும் வழிகாட்டுகிறோம்.
 
இப்டீக்கா
 
எப்படி காலை மதியம் மாலை அப்படின்னு பகலில் மூணு இருக்கோ அதே மாதிரி
முன்னிரவு நள்ளிரவு பின்னிரவுன்னு மூணு இருக்கோ அப்படி
 
20, 20 வருஷமா வாழ்க்கையை பிச்சி பிசைஞ்சு வாழச் சொல்லி அண்ணாத்தேங்க சொல்லிக் கொடுத்திருக்காங்கோ..
 
அதான் நூறு வயசு வாழ்ந்திட்டா கனகாபிஷேகம் செஞ்சு முழுமை அடைந்த ஆத்மா அப்டீன்னு கொண்டாடறோம்.
 
நம்மகிட்ட தான் இந்த பிளானும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.
 
 
என்ன பிரச்சனை என்றால் இதையெல்லாம் விளக்கம் சொல்லாம நம்ம பெரியவர்கள் சொல்லிக் கொடுத்து வருவதுதான்.
 
 
சாத்திரங்கள் மறந்து சடங்குகள் மட்டும் வாழ்வதால் சாதிகளும் சடங்களும் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.
 
 
இப்ப ஆரம்பத்திலிருந்து வர்ரேன்..
 
 
(மறுபடியும் ஆரம்பமா என அழாதீங்க)