வயாவிளான் உள்ளிட்ட வலி வடக்குக் காணிகள் விடுவிப்பு

694

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அடக்கப்பட்டிருந்த பலாலி வடக்கு, வயாவிளான் தெற்கு, வயாவிளான், ஒட்டகப்புலம்-வயாவிளான் பகுதிகள் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட காணிகளில் வாழ்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு முதல் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து இரவல் காணிகளில்  வசித்து வந்தனர்.

கால் நூற்றாண்டுக்கு மேலாக இடர்களுடன் வாழ்ந்து வந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக் காணிகளில் வாழக் கிடைத்ததை எண்ணி தமது மகிழ்வை வெளிப்படுத்துனர்.

தங்கள் காணிகள் தமக்குக் கிடைப்பதற்குப் பங்காற்றியவர்கள் அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

அதே வேளை, விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறுவதில் உள்ள பொருளாதார, நடைமுறைச் சிக்கல்களையிட்டு அவர்கள் தமது விசனத்தையும் வெளிப்படுத்தினர்.

இதே போல் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அடைபட்டுக் கிடக்கும் மற்றக் காணிகளும் விடுவிக்கப்பட்டு, சகல உரிமைகளுடனும் வாழும் வேட்கையையும் அவர்கள் முகங்களிலிருந்து மதிப்பிட முடிந்தது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.