நாளொரு குறள் பொருளுடன் – 83

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :3

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

ஏன் அப்படி?

எதற்காக சம்பாதிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் வைத்திருப்பவன் மட்டுமே ஊக்கத்துடன் உழைத்து சம்பாதிப்பான். இதற்கு பதில் தெரியாதவன் உழைப்பில் சோர்வுற்று போகிறான்.

விருந்தோம்பலால் மகிழ்வுற்றவர் விருந்தோம்பியவனின் துணை நிற்பர். அனைத்து நன்றிகளிலும் மிக உயர்ந்தது செஞ்சோற்றுக் கடன். புரந்தார் கண் நீர்மல்கச் சாதல் என்று பின்னர் இன்னொரு குரலில் வள்ளுவர் சொல்வார்.

ஆண்டாண்டு காலம் செய்த தவப்பயனை விருந்தோம்பலில் மகிழ்ந்து கொடுத்த முனிவர்களின் கதைகள் ஆயிரமாயிரமுண்டு.

எம்.ஜி.ஆரை  நம் வாழ்வில் கண்டோம். அவரின் விருந்தோம்பலால் அவருக்கு கிடைத்த நட்புகள், தொண்டர்கள் அனேகம். அதனால் வீழ்ச்சியே இல்லாமல் வாழ்ந்தார்.

விருந்தோம்பலால் மனங்களில் நிறைவும் மகிழ்வும் தோன்றுகின்றன. அவை விருந்தோம்பியவனுக்கு பலமாக துணை நிற்க, விருந்தோம்பும் ஆவலில் மேலும் மேலும் செல்வம் ஈட்டுவான் இல்வாழ்வான்.

பயன் தாரா செல்வம் பயம் தரும். அதனால் செல்வம் அழியும்.
பயன் தரும் செல்வமே வளரும்.ப்