எந்த ஆழி எந்த மின்குமிழுக்குரியது

785

புதிதாகக் கட்டப்பட்ட நண்பன் ஒருவனின் வீட்டுக்கு முதன் முதலாகச் செல்கின்றீர்கள். மாடியில் உள்ள கூடத்தில் மூன்று மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குரிய ஆழிகள் (Switch) மூன்றும் மாடிப்படி தொடங்கும் இடத்தில் உள்ளன. அவ்வாழிகளை அழுத்தும் போது மின்குமிழ் வெளிச்சம் மட்டுமே தெரிகிறது. எந்த ஆழியை அழுத்த எந்த மின்குமிழ் ஒளிரும் என்பது தெரியவில்லை. அதை வைத்து உங்கள் நண்பர் உங்களுக்கு சவால் விடுகிறார். எந்த ஆழி எந்த மின்குமிழுக்குரியது என்று கண்டு பிடிக்குமாறு சவால் விடுகிறார். ஆழியில் அடையாளமிட ஒரு பென்சிலை உங்களுக்குத் தந்து விட்டு ஒரு முறை மட்டும் தான் மாடிப்படியேறலாம் என்று நிபந்தனை விதிக்கிறார். எங்கே.. எந்த ஆழி எந்த மின் குமிழுக்கு என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

விடை :-

முதலாவதாக உள்ள ஆழியை அழுத்தி, சிறிது நேரம் காத்திருந்து, அணைத்து விட்டு இரண்டாவதாக உள்ள ஆழியை அழுத்தவும். உடனடியாக மாடிக்குச் செல்லவும். ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின்குமிழுக்குரிய ஆழி இரண்டாவது ஆகும். மற்ற இரண்டு மின்குமிழ்களில் சூடாக உள்ள மின்குமிழுக்கான ஆழி முதலாவதாக உள்ள ஆழியாகும். எஞ்சி இருக்கும் ஆழி மூன்றாவதுக்குரியது.