சுவாமி விவேகானந்தர் வழியில் நட்பு

நாம் எமது வாழ்க்கையை, பல உறவுகளுக்கு மத்தியிலேதான் வாழ வேண்டும். பிறருடன் தொடர்பு கொண்டவர்களாக நாம் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்தகையதொரு தொடர்பு இல்லையேல் எம் வாழ்வு நிலையற்றதாகிவிடும். பிறருடன் கசப்பான உறவுகளைக் கொண்டிருந்தால் நாம் உடலாலும் மனதாலும் தினமும் துன்பப்பட நேரிடும். மாறாக உண்மை, அன்பு, மரியாதை என்பவற்றை அடிப்படையாக வைத்து உறவுகளை அமப்போமானால் மிகவும் சரியான, இன்பமான வாழ்க்கையை நாங்கள் வாழலாம்.

எம்மில் பலர் இந்நாட்களில் அதிக நேரம் செலவிடுவது நண்பர்களுடனேயே. மனிதனின் வாழ்வில் குறிப்பாக மாணவர் சமுதாயத்தில் நட்பு என்பது மிகவும் அவசியமானதொன்று. எம்மைப் புரிந்து, எம்முடன் வாழ்வு முழுவதும் நல்லன, தீயனவற்றை அறிந்து எம்மை நல்வழிப்படுத்தக் கூடிய ஒரு நல்ல நட்பையே அனைவரும் விரும்புகின்றோம்.

உண்மையான நட்பால் எம்முள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர முடியும். இறைவன் எமக்களித்த பெறுமதியான, விலை மதிப்பற்ற பரிசுகளே நண்பர்கள். சிறந்த நட்பைத் தேர்ந்தெடுக்கவும், மேம்படுத்தவும், தக்க வைத்துக் கொள்ளவும் சுவாமி விவேகானந்தர் வழியிலே செல்வோம்.

சுவாமி விவேகானந்தராம் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த மக்களுடன் நட்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. கீழைத்தேய மற்றும் மேலைத்தேய கலாச்சாரம் பற்றிய அறிவு, ஆழ்ந்த ஆன்மீக நுண்ணறிவு, வல்லமை, இனிமையான சொற்பிரயோகம், ஆளுமை, இரக்கம், திடமான உடலமைப்பு என்பன அவர் நட்புக்கொள்ளவும் நண்பர்களை சேர்த்துக்கொள்ளவும் துணை நின்றன.

எனவே அவர் வழியில் நாமும் நட்பை வளர்ப்போம்