நான் ருசிக்க ருசிக்க வத்தக்குழம்பு வச்சேன்
அம்மா கைமணம் வருமான்னு கேட்டார்
நான் இனிக்க இனிக்க அதிரசம் செய்தேன்
அம்மா பக்குவம் வரலையேன்னு கேட்டார்
நான் மணக்க மணக்க காஃபி கொடுத்தேன்
அம்மா காஃபி போல் வருமான்னனு கேட்டார்
நான் வியர்க்க வியர்க்க துணி தோய்ச்சு தந்தேன்
அம்மா சலவை போல் வெண்மையில்லைன்னு சொன்னார்
நான் என்னதான் செய்யறதுன்னு யோசிச்சுப் பார்த்தேன்
பளிச்ச்சுன்னு பல்பு எரிஞ்சது மூளையில்
பளார்னு முதுகில ஒண்ணு வெச்சேன் பாருங்கோ
இந்த மாதிரி அவா அம்மா செஞ்சதே இல்லையாம்.