வயாவிளான் மத்திய கல்லூரியில் நாளை நடைபெற இருக்கும் சிதம்பரா கணித சவால்

648

இங்கிலாந்தை இயங்கு தளமாகக் கொண்டு, உலகளாவிய ரீதியில் நடைபெறும் “சிதம்பரா கணக்குச் சவால்” இளம் பிள்ளைகளின் கணித வள மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் இச்சவாலில் வெற்றி பெறும் பிள்ளைக்ளுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படுவதோடு, உச்சப் புள்ளி பெறும் பிள்ளை இலண்டனுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்படுகிறார்.

பயனும் சிறப்பும் மிக்க இச்சவால் கடந்த ஆண்டு முதன் முதலாக வயாவிளான் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றிய இச்சவால் இந்த ஆண்டும் வயாவிளான் மத்திய கல்லூரியில் நாளை நடைபெற இருக்கிறது.
வலி வடக்குப் பிரதேசத்தில் வசிக்கும் பிள்ளைகள் பங்குபற்றும் ஒரே ஒரு சவால் நிலையமாக வயாவிளான் மத்திய கல்லூரி திகழ்வது எமது கல்லூரிக்குப் பெருமை ஆகும்.

இப்பெருமை காலம் காலமாக தொடர வேண்டும் என்பதே மக்களின் ஆசையாகும். அவர்கள் ஆசை நிறைவேற உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் வயவன் இணையத்தின் வழ்த்துகள்.