கவிதை எழுதுவது எப்படி – 3 (படித்ததில் பிடித்தது)

728

ஏதோ எழுதவேண்டுமே என்று எழுதியது…. உங்களின் பதில்களைக் கண்டு மீண்டும் மீண்டும் எழுதத் தோணுகிறது…
சரி.. அடுத்த பகுதி…

இந்த பகுதியில் நாம் காண இருப்பது..

  • குணங்கள்
  • பொய்

ஒரு பொருளின் குணத்தினால் நாம் ஒப்பிடும்போது கவிதையின் கனமும் அழகும் கூடும். அதை பொய் கலந்து மட்டுமே
சொல்ல முடியும்.. இனி இதைப்பற்றி காண்போம்

குணங்கள்

முந்தைய பதிவில் நாம் இன்ன பொருளை நினைக்கவேண்டும் என்பது பற்றி அறிந்தோம். தற்போது அதை எப்படி
கோர்ப்பது என்பது பற்றி தெளிவாக காணலாம்..
உதாரணத்தோடு செல்வோம்…

நம் கண்களின் வழியே காண இருப்பது ஒரு மரம்.

மரத்தை நினைக்கையில் நமக்கு உடனே நினைவுக்கு வருவது வேர், மரம், கிளை, இலை, பூ, பூவின் உதிர்வு அல்லது
இலையின் உதிர்வு, காற்றால் மரம் அசைவது போன்றவைகள்..
இதன் குணம் என்னென்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.. கவிதையில் முக்கியமாக நாம் எடுத்துக்கொள்ள
இருப்பது ஒரு பொருளின் குணம்…. மேகம் மென்மையாக இருக்கிறது என்பதால் அதை ” மேகத்தைப் போல கூந்தல் ”
என்று கவிதை சொல்லுகிறோம். பொருத்தமில்லாமல் எழுதினால் அதில் அர்த்தமில்லை அல்லவா? உதாரணத்திற்கு ”
இடியைப் போல கூந்தல் ”

இதுபோல மரத்தின் குணம் பற்றி அறிவது…

உறுதியானது வேர்
நிலையானது மரம்
பொருளுக்கேற்ப கிளையின் பொருத்தம் மாறும்..
மென்மையானது பூ
பூவின்உதிர்வு என்பது ஒரு இழப்பைக் குறிக்கிறது.

இம்மாதிரி பல.

” வேர் போல உறுதியானது நம் காதல் ”
” மரம் போல நிலையாக நிற்கிறாய் நீ ”
” உன் இதயம் பூ போல மென்மையானது ”
” என்னிடமிருந்து ஒரு பூவின் உதிரலாய் சென்றுவிட்டாய் ”
” பூவின் உதிர்தல் கண்டு மரம் அழுகிறது. “

எப்படிங்க இந்த மாதிரி யோசிக்கிறது என்று கேட்பது தெரிகிறது.,,,
கடைசி பாராவை படியுங்கள்..

நாம் காண்பவற்றின் குணங்களால் மட்டுமே நாம் உவமைகளைப் பொருத்த முடியும். சிலவற்றிற்கு விதிவிலக்கும் உண்டு,,,

பொய்:

நம் அன்றாட வார்த்தைகள் பல பொய்யாகவே சொல்லிவருகிறோம்.. இங்கே கற்பனை கலந்த பொய்களை அள்ளி
வீசவேண்டும்.. நம் பொய்கள் எல்லாமே நிஜமாகத் தோன்றுவதுதான் கவிதையின் சிறப்பு.. எந்த ஒரு இடத்திலும் இதை
பயன்படுத்தலாம். நாம் எழுதும் பொய்கள் பொருத்தமாக இருந்தாலே போதுமானது……….
” நீ நிலவைப் போல அழகு ” என்றால் அது பொய்தானே!  உண்மையில் நிலவுக்கு என்று அழகு ஏது? இம்மாதிரி சில
கற்பனைகளை கலந்து விட்டால் பொய் நிஜமாகிவிடும்.

” மான்களின் கண்கள் உனக்கு ” மானின் கண்களை நாம் அவ்வளவாக கண்டிருக்க மாட்டோம்.. இருப்பினும் பொய்
இங்கே விளையாடுவது பாருங்கள்..
” தேன் போன்ற இனிமையான பற்கள்” தேனுக்கும் பற்களுக்கும் என்ன சம்பந்தம்? சும்மா போட்டு விடுவதுதான்…. பற்கள்
உங்களுக்கு பிடிக்கவில்லையா? சொற்கள் என்று மாற்றிவிடலாம்…. 
காதல் எந்த உவமைக்கும் பொருந்தும். சரி இப்போது நான் உதாரணம் கொடுக்கப் போவதில்லை. நீங்களாகவே
வார்த்தைகளை வைத்து கவிதை அமையுங்கள்..

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்………

காதலியை வர்ணிக்கிறீர்கள்… நீங்கள் கண்ட ஒரு இயற்கைப் பொருளை வைத்து………………. அதன் குணத்தை வைத்து,,,
(கவிதை கற்கும் நண்பர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.)

————————————————————————————

ஒரு பொருளைக் கண்டால் அதைப் பற்றி நன்கு சிந்திப்பது ஒன்றே கவிதையை அழகாக எழுதும் வழி.. ஒரு இலையை
காண்கிறீர்கள்…

அது மெல்லியதாக இருக்கிறது..
பச்சையாக இருக்கிறது
அதில் இலையின் நரம்புகள் இருக்கிறது
காம்பு இருக்கிறது
சற்றே இதய வடிவில் இருக்கிறது. அல்லது நீளமான வடிவில் இருக்கிறது
காகிதம் போல கிழிந்துவிடும்
இலையின் உதிர்வுக்குப் பின் அதன் காலம் குறைவு
இலைதான் பின் சருகாக மாறும்
சருகாக மாறியபின் பொடிப்பொடியாக போய்விடும்

இம்மாதிரி ஒவ்வொரு பொருளையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்……………. இது நிச்சயம் சாத்தியமே!! இதை எப்படி
ஒப்பிடுவது என்பது பிறகுதான்.. முதலில் நமக்கு வார்த்தைகள் அமையவேண்டும். கருவுக்கு சம்பந்தமே
இல்லையென்றாலும் அந்த வார்தைகளை நாம் சம்பந்தப்படுத்திவிடலாம்………….

நினையுங்கள்.. கவிதை எழுதுங்கள்…